Last Updated : 05 Oct, 2014 10:08 AM

 

Published : 05 Oct 2014 10:08 AM
Last Updated : 05 Oct 2014 10:08 AM

லூமியர் சகோதரர்கள் 10

சினிமாவை முதன்முதலில் உருவாக்கிய லூமியர் சகோதரர்களில் இளையவரான லூயிஸ் லூமியரின் பிறந்தநாள் இன்று. இந்த நாளில் அவர்களைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...

# அப்பா ஆன்டனி லூமியர் சிறந்த ஓவியர். புகைப்படத் தொழில்நுட்பம் தொடங்கிய காலகட்டம் அது. தொழில்நுட்பங்களில் அவருக்கு உதவ பிள்ளைகள் அகஸ்ட் லூமியர், லூயிஸ் லூமியர் இருவரும் வந்தனர்.

# புகைப்படச் சுருளை வேகமாக டெவலப் செய்யும் உலர் தட்டை கண்டுபிடித்து புகைப்படத் துறையில் புரட்சியை ஏற்படுத்தினார் லூயிஸ். அப்போது அவருக்கு வயது 17.

# எடிசன் உருவாக்கிய கைனடோஸ்கோப் திரையிடலுக்குப் போயிருந்தார் ஆன்டனி. அதில் ஓர் ஓட்டை வழியாக காட்சியைப் பார்க்க வேண்டும். அதில் மனதைப் பறிகொடுத்தவர், அதுபற்றி தன் மகன்களிடம் பேசிப் பேசியே சினிமா தொழில்நுட்பத்துக்கு அடித்தளமிட்டார்.

# எடிசனின் கைனடோஸ்கோப்பில் பிரேம்கள் அதிகம். கேமரா பெரியது. வெவ்வேறு கருவிகள் தனித்து இயக்கப்பட்டதால் படம் தெளிவாக இருக்காது. இரைச்சலும் அதிகம். லூமியர் சகோதரர்கள் எல்லா கருவிகளையும் இணைத்து பிரேம்களை குறைத்து புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கினர்.

# முதல் சலனப்படம் 1895-ல் சினிமேட்டோகிராப் கருவி மூலம் பாரீஸின் கிராண்ட் கேஃப் விடுதி ஹாலில் திரையிடப்பட்டது.

# பல்வேறு காட்சிகளை சிறு படங்களாக எடுத்து, மக்களிடம் காட்டி சிறு தொகை வசூலித்தார்கள். தாங்கள் புதிய புரட்சியைத் தொடங்கியிருக்கிறோம் என்பதையே அப்போது அவர்கள் உணரவில்லை!

# ஐரோப்பா, ஆசியாவில் பயணம் செய்து பல படங்களைத் திரையிட்டனர். லண்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் திரையரங்குகளைத் திறந்தனர். இந்த உத்வேகத்தில் பலரும் படம் எடுக்க கிளம்பி, சினிமா ஒரு துறையாக உருவெடுக்கத் தொடங்கியது.

# முக்கியமான இடங்கள், இயற்கைக் காட்சிகள், ரயில் ஓடுவது, கூட்டமாக மக்கள் மோதிக்கொள்வது என்பதுபோன்ற பொதுவான காட்சிகளைப் படம் பிடிக்க 1896-ம் ஆண்டிலேயே பலருக்கும் பயிற்சி கொடுத்து உலகம் முழுவதும் அனுப்பினர் லூமியர் சகோதரர்கள்.

# உலகின் முதல் டாக்குமென்டரிகளும் இவர்கள் எடுத்ததே. லியான் நகர தீயணைப்புத் துறைக்காக 4 படம் எடுத்துக் கொடுத்தனர்.

# வண்ணப் புகைப்படங்கள், ஆட்டோகுரோம் தொழில்நுட்பம், மருத்துவ ஆய்வுகள் ஆகியவற்றிலும் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x