Published : 15 Feb 2017 10:24 AM
Last Updated : 15 Feb 2017 10:24 AM

இணையகளம்: தமிழகம் என்ன நினைக்கிறது?

கருப்பு கருணா

ஓரளவுக்குத்தான் பொறுத்துக்க முடியும்ன்னு அந்த நீதிபதிகளுக்கே தெரிஞ்சிப்போச்சிப்பா!



கருந்தேள் ராஜேஷ்

- குன்ஹா

தினம் தினம் ஆயிரத்தெட்டுப் பிரச்னைகளைச் சந்திச்சிட்டு இருக்கோம். நம்மைச் சுத்தியே லஞ்சம், ஊழல்லாம் கொடிகட்டிப் பறந்துட்டு இருக்கு. இப்போதைய இந்தியாவில் எப்படியெல்லாம் பதவிகள் துஷ்பிரயோகம் செய்யப்படுதுன்னு பார்த்துட்டுதான் இருக்கோம். நீதி, நியாயம்லாம் அரசியல்வாதிகளுக்கு ஒரு மேட்டரே இல்லைன்னுதான் எத்தனையோ சம்பவங்கள் நம்மை நினைக்கவெச்சி, சோர்வைக் கொடுத்துட்டே இருக்கு. இந்த நிலையில்தான், சொத்துக்குவிப்பு வழக்கோட தீர்ப்பு, ஓரளவாவது மனசை நிம்மதி அடையவைக்குது. எப்போதோ பிறக்கக்கூடிய அரிய மனிதர்கள்ல ஜான் மைக்கேல் டி குன்ஹா ஒருத்தர் என்பதில் சந்தேகமே இல்லை.

செய்யும் வேலைக்கு நியாயமா இருப்பது என்பதற்கு இனி குன்ஹா பேரைச் சொன்னாலே போதும். பலருக்கும் ஒரு ரோல்மாடல் வேணும்னா குன்ஹாவை தாராளமா ஃபாலோ செய்யலாம். ஒரு மிகப்பெரிய கும்பலுக்கு எதிரா, என்ன நடந்தாலும் பின்வாங்காமல் செயல்பட்ட மனிதன். சமகால இந்தியாவுல இப்படி ஒரு தீர்ப்பு ஆச்சரியப்படத்தான் வைக்குது. நினைச்சிப் பார்க்கமுடியாத பணம், பதவிகள், வசதிகள் எல்லாம் கிடைக்க வாய்ப்பு இருந்தும், கடமையைக் கச்சிதமா நிறைவேற்றிய மனிதன். விருப்பு வெறுப்பு இல்லாமல், எடுத்துகிட்ட வழக்குக்கு மட்டும் சின்சியரா இருந்து தீர்ப்பைப் பக்காவா வெளியிட்ட நபர். இப்போவரை அந்தத் தீர்ப்பு நங்கூரம் போல நிக்குது.

நம்மளைச் சுத்தி இருக்கும் பல கொடூரங்களை எதிர்க்க இந்தத் தீர்ப்பு ஒரு மெல்லிய நம்பிக்கைக் கீற்று. இப்பவும் கட்டாயம் நல்லது நடக்கும் என்பதற்குக் குன்ஹா போன்றவர்கள் நம்மைபோன்ற சாதாரண ஆட்களுக்குக் கொடுத்திருக்கும் தைரியம் இது.



விஜயசங்கர் ராமசந்திரன்

அரசியல்வாதி பேசுவதற்கும், அரசியல்வாதியுடன் இருந்தவர் பேசுவதற்கும் உள்ள வேறுபாட்டைக் கடந்த சில நாட்களில் தெளிவாக உணர முடிந்தது.



ஜே. பிஸ்மி கான்

சசிகலா - நான் ஒரு சிங்கம்

நீதிபதி - சரி கூண்டுக்குள்ள போ

# தீர்ப்புடா



முத்து ராம்

எதிர்பார்த்த தீர்ப்புதான். - சு.சுவாமி.

நேத்துதான் சசிகலாவ முதல்வராக்கலனா கவர்னர் மேல கேஸ் போடுவேன்னு சொன்னாரு. சார் மாதிரி ஒரு ஜென்டில்மேனை துபாய்ல கூடப் பார்க்க முடியாது.



முத்து ராம்

# தனக்கு எதிரான தீர்ப்பை அதிமுகவினரையே பட்டாசு வெடித்துக் கொண்டாட வைக்கும்னு கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் ஜெயலலிதா. காலம் ஒரு சுவாரஸ்மான, ரசனைக்கார வில்லன்!

# அம்மாவின் வழியில் நடந்தால் நேரா ஜெயில்தான் வரும். வேற எதாவது நல்ல வழி இருக்கானு பாருங்க மிஸ்டர் ஓபிஎஸ்.

# ஜென் நிலைக்கு மேல ஒரு நிலை இருக்குன்னா, அது ஜெயா ப்ளஸ் நிலைதான். தெய்வீக லெவல்!



புஹாரி ராஜா

எடப்பாடி பழனிச்சாமியை என்னா உறவுமுறை சொல்லிக் கூப்பிடணும் சொல்லுங்கய்யா. பெரியப்பாவா?



முகில் சிவா

தப்புத்தப்பா கணக்கு சொன்ன நீதியரசர் குமாரசாமிக்கு தண்டனை எதுவும் கிடையாதா மைலார்ட்?



டிமிட்ரி இவ்நோவ்ஸ்கி

முதல்வர் ஓபிஎஸ்சின் 2 மகன்களின் பெயர் ரவீந்திரநாத், பிரதீப் # இனி அடிக்கடி தேவைப்படும்.



நாகரீகக் கோமாளி

ஆகவே, எடப்பாடிக்கும் தங்கள் ஆதரவை நல்குமாறு வைகோ அவர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்!



அன்பு ராஜா

குற்றவாளி (ஜெ) படத்தை அரசு அலுவலங்களிலிருந்து அகற்று!! அகற்று!!!



தினகரன் ராஜாமணி

அடுத்த பொம்மை தேர்வு # எடப்பாடி பழனிச்சாமி



வேல் குமார்

அம்மாவின் ஆன்மா நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது ஓ.பி.எஸ்.

# ஆமா அவங்க குத்தவாளின்னு அவங்களுக்கே தீர்ப்பு கொடுத்துக்கிட்டாங்க...!



மஹாராஜன் கிருஷ்ண பிள்ளை

இந்த மாசம் ஏதாவது கவர்மெண்ட் ஹாலிடே இருக்கான்னு கேக்குறான்.. இந்த மாசம் கவர்மெண்ட்டே ஹாலிடேல தான்டா இருக்கு.. # அடேய்ய்!!!



ஜ்யோவ்ராம் சுந்தர்

ஜெயலலிதாதான் முதல் குற்றவாளி - அக்யூஸ்ட் 1. அவர் இறந்ததால் தண்டனையிலிருந்து மட்டுமே விடுவிக்கப்பட்டிருக்கிறார். இதில் தெளிவாய் இருப்போம்.



ராஜகோபால் சுப்ரமணியம்

தன் கட்சித்தலைவிக்குத் தீரா களங்கம் விளைவித்த தீர்ப்புக்கு வெடி வெடிச்சு கொண்டாடுற மனசு இருக்கு பாருங்க அதுதான் சார் கடவுள்!



சுகுணா திவாகர்

புதைக்கப்பட்டதாலேயே ஒருவர் புனிதராகிவிட மாட்டார் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. மகிழ்ச்சிகரமான காதலர் தின வாழ்த்துகள்!



யாரோ..

ஆளுனர் கூப்டுவார்னு பார்த்தா ஜட்ஜையா கூப்ட்டுட்டாரு.

#நீதி இருக்கு கொமாரு.



கிருஷ்ண குமார் அப்பு

நோபல் பரிசு இல்லனாலும் பாரத ரத்னா விருது குடுங்கனாச்சும் கேட்டோமே.. இனிமே விஜய் அவார்ட்சு கூட கேக்க முடியாத மாதிரி தீர்ப்பு குடுத்துட்டிங்களேய்யா!!



ச.ந.கண்ணன்

ஜல்லிக்கட்டு, சசிகலா என இரு முக்கியமான விஷயங்களிலும் தமிழக மக்கள் நினைத்ததே நடந்துள்ளது!



யாரோ..

நோ கமென்ட்ஸ்..



யாரோ..

வாடகை வசூலிக்க ரிசார்ட் ஓனர் காத்திருந்தபோது..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x