

நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்
கி. ராஜநாராயணன், விலை: ரூ. 775
வெளியீடு அன்னம் பதிப்பகம்
நவீனத் தமிழ் இலக்கியத்தில் நாட்டுப்புறக் கதைகளின் கூறுகள் அதிகம் இடம்பிடிக்க ஆரம்பித்தது கி.ராஜநாராயணனின் வருகைக்குப் பிறகே. நாட்டுப்புறக் கதை மரபைத் தழுவி அவர் சிறுகதைகள், நாவல்கள் எழுதியது மட்டுமல்லாமல், நேரடி நாட்டுப்புறக் கதைகளையும் அவர் தொகுத்துவருகிறார். இதற்கு முன்பு தனித்தனியாக வெவ்வேறு தலைப்புகளில் வெளிவந்த நாட்டுப்புறக் கதைகள் இப்போது ஒரே தொகுதியில் வெளிவந்திருக்கின்றன. பெரிய வர்கள், குழந்தைகள் என்று அனைவருக்குமான கதைகள் இருப்பது இந்தத் தொகுப்பின் சிறப்பு.