Published : 01 May 2014 02:58 PM
Last Updated : 01 May 2014 02:58 PM

வலைப்பூ வாசம்: ஸ்டார் ஓட்டலில் பிரபல பதிவர்

வலைப்பூ: http://mokkaiblog.blogspot.com/

மீண்டும் ஒருமுறை என்னுடைய இனிமையான அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள் வதில் மகிழ்ச்சி அடை கிறேன். இந்த முறை இன்னும் சுவாரஸ்யமாக 5 ஸ்டார் ஹோட்டலில். அங்கு என்ன சுவாரஸ்யம் இருக்கப் போகிறது என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. இரவில் கூட விளக்கு போடாத கஞ்சத் தனம், சமையல் செய்யும்போது கறை பிடிக்குமே என்ற அறிவு இல்லாமல் வெள்ளை உடை அணிந்திருக்கும் சமையல் காரர்கள், கல்யாண வரவேற்பில் மாப் பிள்ளை அணிந்திருப்பதுபோல கோட் அணிந்து திரியும் சப்ளையர்கள். பாடல் கேசட் வாங்க வசதி இல்லாமல் வெறும் இசை மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும் டேப்ரெகார்டர்... இது போல் முகம் சுளிக்க வைக்கும் பல விஷயங்கள் 5 ஸ்டார் ஹோட்டலில் உள்ளன.

அதனால்தான் எப்பவும் நான் அங்கு செல்வதே இல்லை. மேலும் அங்கு எவ்வளவு நேர்மையான ஆட்களாக இருந்தாலும் அக்கவுண்ட் வைக்க விட மாட்டார்கள். தள்ளு வண்டி கடை, ஆயா கடை, தட்டி விலாஸ் போன்றவைதான் எப்பவுமே என் சாய்ஸ். அதுவும் என் வீட்டருகில் உள்ள ஒரு வண்டிக்கடை அண்ணன் வேர்க்க விறுவிறுக்க சுடும் தோசையின் சுவை அலாதி. பழைய பாக்கியை அவர் கேட்கும் விதமும் அதை கண்டுகொள்ளாத மாதிரி நின்று கொண்டு சாப்பிடுவதும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஒருமுறை என் வாசகர் ஒருவர் என்னைக் காணவந்தார். எப்போதும் என்னைப் பார்க்க வருபவர்களுடன் ஒருவேளை உணவு சாப்பிடும் பழக் கம் எனக்கு உண்டு. அதற்கு காரணம் அவ்வளவு தூரத்திலிருந்து என்னை காண வந்தவர்களுக்கு என்னுடன் சாப்பிடும் பாக்கியத்தை அளிக்க விரும்புவேன். பில்லைக் கூட அவர்களையே தர சொல்லு வேன், அப்போதுதான் அவர்களுக்கு என்னைத் தொந்தரவு செய்ததாகத் தோன்றாது. இப்படி தொலைநோக்கு பார் வையோடு நான் செயல்படுவதால்தான் உலகநாயகன் முதல் ஒபாமா வரை என்னுடன் பழக ஆசைப்படுகிறார்கள்.

வழக்கம்போல் என்னைச் சந்திக்க வந்த வாசகரிடம் சாப்பிடப் போகலாம் என்று கூறினேன். அதற்கு மேல் நடந்ததை காட்சி யாக கூற விரும்புகிறேன். படித்து ரசியுங்கள்

வாசகர்: சார் பக்கத்துல பஃபே சாப்பிட போவோமே..

நான் : அப்படின்னா பூங்கொத்துதானே? என்ன சார் அதைப் போய் யாராவது சாப்பிடு வாங்களா? நம்ம ஆயா கடை பக்கத் துல இருக்கு. வாங்க ஆளுக்கு ரெண்டு இட்லியும் நாலு ஆஃப் பாயிலும் சாப்ட்டு கெளம்புவோம். அப்ப டியே வீட்டுக்கு நாலு இட்லி பார்சல் வாங்கிக் கிறேன்.

வாசகர் : ஐயோ சார் அது பொக்கே. நான் சொல்றது பஃபே. ஹோட்டல்ல போடுவாங்களே அது.

5 ஸ்டார் ஹோட்டலில் எனக்கு பெரிய ஈடுபாடு இல்லாவிட்டாலும் அவர் ஆசைக் காக சென்றேன். இனி அந்த ஸ்டார் ஹோட்டலில் நடந்தவை:

(வாசகர் தன் விருந்தாளி ஒருவரைச் சந்தித்து அவருடன் பேச சென்று விட்டார் )

நம்முடன் வந்துவிட்டு அடுத்தவருடன் பேசினால் நமக்கு அறவே ஆகாதே. சரி ஏதோ வந்துவிட்டோம். சாப்பிடாவிட்டால் அவர் மனது சங்கடப்படுமே என்ற ஒரே காரணத்தால் மனதைத் திடப்படுத்திக் கொண்டு ஆரம்பித்தேன்.

நான் : (டை கட்டிய சர்வரிடம்) : ஏன் தம்பி பஃபேன்னு ஏதோ சொல்றங்களே அப்படினா என்ன?

சர்வர்: சாப்பாடு எவ்வளவு வேணாலும் எடுத்துக்கலாம். கட்டுப்பாடு கிடையாது.

நான்: அட நல்லா இருக்கே. சரி அப்போ ரெண்டு பஃபே பார்சல் பண்ணிக் கொண்டு வா.. தயிர் பச்சடி மறந்துறாத.. ஓடு..

சர்வர் (கோபமாக): சார்.. அதெல்லாம் பார்சல் பண்ண முடியாது. இங்கேயே சாப்பிட மட்டும்தான்.

(என்னாங்கடா உங்க சட்டம் என்று அலுத்துக் கொண்டு தட்டை ஏந்தியவனாக வரிசையில் நின்றேன்.)

நான்: டேய்… என்னடா நெனச்சிட்டு இருக்கீங்க. என் மேல ஒருத்தன் கை வச்சிட் டான்? கூப்பிடுடா மொதலாளிய.

மானேஜர்: என்ன சார்.. என்ன பிரச்சனை?

நான்: உங்க ஆளுதானே எவ்வளவு வேணாலும் எடுத்துக்க சொன்னான். அப்பு றம் ஏன் இந்தாளு என்னை அடிச்சான்?

மானேஜர்: (விசாரித்துவிட்டு): யோவ் எவ்வளவு வேணா எடுத்துக்கன்னு சொன்னா நீ அடுத்தவன் தட்டுல இருந்து எடுப்பியா? மரியாதையா பாத்திரத்தில இருந்து மட்டும் எடுத்துக்க.

(ஆவேசத்தைத் தணிக்க தண்ணி குடித்து உடலைக் குலுக்கி சரி செய்துவிட்டு மீண்டும் பிரியாணி பக்கம் சென்றேன்.)

வந்து பார்த்தால் டேபிளில் நான் விட்டு சென்ற தட்டை காணவில்லை.

நான்: என்னடா ஹோட்டல் நடத்துறீங்க.? வச்சிட்டு போன தட்ட அதுக்குள்ளே எவனோ திருடிட்டான். அதுல நான் பாதி சாப்பிட்டு வச்சிருந்த ‘நல்லி'ய காணோம்.

மானேஜர்: சாரி சார்.. நீங்க சாப்பிட்டு வச்சிட்டு போனத பாத்துட்டு தெரியாம மிச்சம் வச்சிட்டீங்கன்னு கிளீன் பண்ணிட்டு போய்ட்டாங்க. வேணும்னா இன்னொரு ப்ளேட்ல கொண்டு வர சொல்லவா சார்?

நான்: ஓ.. அப்படியா? சரி சரி... நல்லா பெரிய ‘நல்லி'யா அள்ளி போட்டு கொண்டு வா..

சாப்பிட்டுவிட்டு கப்போடு போனபோது..

சர்வர்: சார் டெசர்ட்ஸ் அந்த பக்கம்.

நான்: யோவ் என்னைய என்ன கேனப் பையனு நெனச்சியா? நம்ம ஊர்ல ஏதுயா டெசெர்ட்?

சர்வர்: அந்த டெசெர்ட் இல்ல சார்.. ஐஸ் கிரீம், சாலட் அந்த மாதிரி.

நான்: யோவ்.. ஏன் அதை ஐஸ்கிரீம்னு தமிழ்ல சொல்ல மாட்டியா? சரி..சரி.. மன்னிச் சிட்டேன். போ..

ஒரு வழியாக வேண்டா வெறுப்பாக சாப்பிட்டு முடித்துவிட்டேன்.

(இன்னும் என்னுடன் வந்த வாசகர் உள்ளே வரவில்லை)

சர்வர்: சார்.. செக்.

நான் : யோவ்.. இது என்ன பேங்க்கா செக் கேக்குற? என்னையா ஹோட்டல் நடத்துற? நான் நெனச்சா உங்க ஹோட்டல் தலையெழுத்தையே மாத்திருவேன்.

மானேஜர்: சார். அவரு பில் கேட்டாரு.

நான்: என்கிட்டயே பில் கேக்குறியா? நான் பிரபல ப்ளாக் பதிவாளர்.

மானேஜர் (கடுப்பாக) : நீ சார் பதிவாளரா இருந்தாலும் பில் கொடுத்துதான் ஆக ணும்.. மரியாதையா பணத்த எடு.

(ஒரு வழியாக வாசகர் வந்து பில் கொடுத்து என்னை காப்பற்றி விட்டார். இவ்வளவு நேரம் என்னைத் தனியாக அல்லல்பட விட்டாலும் பில் தொகை செலுத்திய ஒரே காரணத்துக்காக அவரை மன்னித்துவிட்டேன்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x