ஒரு நிமிடக்கதை: புது வீடு!

ஒரு நிமிடக்கதை: புது வீடு!
Updated on
2 min read

“புது வீட்டுக்கு இப்ப குடி போக வேண்டாம்பா. அதை வாடகைக்கு விட்டு டுங்க. நம்ம எப்பவும் போல வாடகை வீட்டுலயே இருந்துக்கு வோம்!”

வங்கிக்கடன் சக்திக்கு மீறிய தாக இருந்தாலும் வாங்கி, ஆசை, ஆசையாய் பார்த்து கட்டிய வீடு. மகள் திருமணம் நடக்கும்போது நாம் சொந்த வீட்டில்தான் குடி யிருக்கணும் என்று வைராக் கியத்துடன் எழுப்பப்பட்ட வீடு. அதற்கு இப்படி ஒரு முட்டுக் கட்டையைப் போடுவாள் மகள் ரமா என்று சுப்பிரமணி எதிர்பார்க்க வில்லை.

“என்னம்மா பிரச்சினை? வீடு ஒதுக்குப்புறமாக இருக்கிறதே எப்படி ஆபிசுக்கு போயிட்டு வர்றதுன்னு யோசிக்கிறியா?”

மகளிடம் எவ்வளவோ கேட்டுப் பார்த்து விட்டார்.

“ம்கூம்.. வேண்டாம்ன்னா விடுங்க!” ஒரேயடியாய் சொல்லி விட்டு விட்டாள் அவள்.

“இதென்ன கிணறு வெட்ட பூதம். புது வீட்டை வாடகைக்கு விட்டா, குடி வர்றவங்க வீட்டை நல்லா வச்சுக்குவாங்களா? நம்ம சொந்த வீட்டை கட்டின பின்பும் வாடகை வீட்டைத்தான் கூட்டிப் பெருக்கிட்டு இருக்கணுமா? மாதா மாதம் வாடகை தண்டம் அழணுமா? உன் மகள் மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்கா கேளேன்!” என்று தன் மனைவி யிடம் ஒரு பாடு புலம்பித் தீர்த்து விட்டான் சுப்பிரமணி.

அதற்கு அவன் மனைவி யிடம் இருந்து புன்முறுவலுடன் பதில் வந்தது.

“அதெல்லாம் நான் எப்பவோ கேட்டாச்சு. அவ நல்லதுக்குத் தான் அப்படி சொல்லியிருக் காள்” என்று அலட்சியமாகச் சொல்ல புரியாமல் பார்த்தான் சுப்பிரமணி.

“ஆமாங்க. இப்பத்தான் நீங்க மகளை இஞ்ஜினீயரிங் படிக்க வச்சு நிறைய செலவு செஞ்சு ஓய்ஞ்சீங்க. அடுத்தது மகனும் இஞ்ஜினீயரிங் காலேஜ்ல சேர்ந் துட்டான். அதுக்கும் லட்சக் கணக்குல செலவு. இந்த வேகத் துல லோன் போட்டு இருபது லட்சம் ரூபாய்ல இந்த வீட்டை வேற கட்டீட்டீங்க. அதுவும் எப்படி? நாளைக்கு மகள், மகன் கல்யாணமாகி பேரன் பேத்தி கள்ன்னு வந்தா எல்லோரும் ஓடிப் பிடிச்சு விளையாடணும். கூட்டுக் குடும்பமா இருக்கணும்ன்னு மூணு பெட்ரூமும் பெரிய ஹாலுமா கட்டிட்டீங்க. அது கிரஹப்பிரவேசம் முடிஞ்ச இதே சூட்டுல மகளுக்கு மாப்பிள்ளை யும் தேடறீங்க.

வர்ற மாப்பிள்ளை வீட்டார் நம்ம பெரிய வீட்டைப் பார்த்து ‘ஆகா பொண்ணு வீடு ரொம்ப வசதி. இருபது சவரன் என்ன நூறு சவரனே கேட்கலாம். ஐம்பாதாயிரம் என்ன இரண்டு லட்சமே வரதட்சணை கேட் கலாம்ன்னு நினைக்க மாட்டாங் களா? அதனாலதான் நம்ம கஷ்டத்தோட கஷ்டமா என் கல் யாணம் முடியற வரைக்குமாவது வாடகை வீட்லயே இருக்கலாம். சொந்தவீட்டை பத்தி மாப் பிள்ளை வீட்டார் கேட்டா லோன் கட்டறதுக்காக அதை வாடகைக்கு விட்டிருக்கோம்ன்னு சொல்லலாம்ன்னு உங்க மகள் தாங்க யோசனை சொல்றா. அதை உங்ககிட்ட அவளுக்கு சொல்லத் தோணலை அவ்வளவுதான்!”

மனைவி சொன்னதைக் கேட்டு, ‘என்ன இருந்தாலும் என் மகள் என் மகள்தான்!” என்று பெருமையோடு சொன்னான் சுப்பிரமணி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in