

இசையரசி எம்.எஸ்.சுப்பு லட்சுமியின் வாழ்க்கை யில் நடந்த சம்பவங் களை எடுத்துக் கூறும் ‘குறையொன்று மில்லை’ என்ற வர லாற்றுத் தொடர் பொதிகை தொலைக் காட்சியில் இன்று இரவு 9.30 மணிக்கு ஒளி பரப்பாகிறது இந்த நிகழ்ச்சியை ‘தி இந்து’ நாளிதழுடன் இணைந்து பொதிகை தொலைக்காட்சி வழங்கி வருகிறது.
இந்த வார ‘குறையொன்றுமில்லை’ நிகழ்ச்சியில் இலங்கைக்குச் சென்று எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய ‘கதிர் காம கந்தன்’ பாடல் இடம்பெறவுள்ளது. ராமகிருஷ்ணா மிஷன் நிதி உதவி கச்சேரிக்காக பாபநாசம் சிவன் பிரத்யேகமாக எழுதிய பாடல் அது.
இதையடுத்து வயலின் இசை கலைஞர் திரு வாலங்காடு சுந்தரேச ஐயர் பற்றிய சுவையான தகவல்கள் மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடி, சுந்தரேச ஐயர் வயலினில் வாசித்த ‘கயிலாஷ பதே’ என்ற பல்லவியும் இடம்பெறும்.
அடுத்து டி.எச்.விநாயக் ராம், ஆர்.கே.ராம் குமார், கே.வி.பிரசாத் ஆகியோர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கச்சேரியில் பக்கவாத்தியம் வாசித்த அனுபவங்கள் பேட்டிகளாக ஒளிபரப்பாகும்.
41-வது வாரமாக இன்று இரவு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பை செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணிக்கு காண லாம்.