Published : 04 Jul 2016 05:26 PM
Last Updated : 04 Jul 2016 05:26 PM

யூடியூப் பகிர்வு: அஸ்ஸாமின் வெள்ளப் பேரிடர் மேலாண்மை பயிற்சிகள்!

அஸாமில் சமீபத்திய வெள்ளத்தால், சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். மாநிலத்தில் மொத்த நிலப் பகுதிகளில் சுமார் 40 சதவீதப்பகுதி வெள்ளத்தால் அழிந்திருக்கிறது.

என்ன செய்யலாம் என்று யோசித்த மாநில அரசு, ஆயுதப்படையுடன் இணைந்து வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடத் திட்டமிட்டிருக்கிறது.

'எக்சர்சைஸ் ஜால்ரஹாட்' என்ற பெயரில் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநில அரசு மற்றும் ஆயுதப்படைகளின் கூட்டு முயற்சியில் இது ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

இதில் வெள்ளத்தின்போது செய்யவேண்டியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஹெலிகாப்டர்கள் மூலம் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், வெள்ளத்தின் போது மேற்கூரைகளில் தத்தளிக்கும் மக்களைக் காப்பாற்றுவது ஆகியவற்றுக்கான ஒத்திகைகளும் நடத்தப்பட்டன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீர்மூழ்கி கடற்படையினர் நிவாரணப் பொருட்களை வழங்கும் பயிற்சிகளும் சரிபார்க்கப்பட்டன. இவை அனைத்துமே வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகும்.

வைசாக்கிலும், குஜராத்திலும் இதே போன்ற பயிற்சியளிக்க ஆயுதப்படை திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சிக்கான காணொளியைக் காண: