Published : 23 Mar 2017 05:15 PM
Last Updated : 23 Mar 2017 05:15 PM

நெட்டிசன் நோட்ஸ்: அதிமுக சின்னம் முடக்கம்- அமித்ஷா புன்னகை?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதையடுத்து, சசிகலா அணிக்கு தொப்பி சின்னமும், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த நெட்டிசன்களின் கருத்து இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Sangeetha Venkatesh

இந்த ஊர்லயே தேர்தலுக்கு முன்பே தொப்பி வாங்குன கோஷ்டி நம்ம கோஷ்டிதாண்ணே!

தளபதி பலேபாண்டியா

தினகரன் மைண்ட்வாய்ஸ்: தொப்பியை புடுங்கிட்டு தலையில துண்ட போட்டுடுவாங்களோ?

Inigo Pious

ஜெயா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் "இன்னும் சில மாதங்களில் நல்ல செய்தி வரும்" என பொன்னார் சொன்னார். கழகமே இல்லாத ஆட்சி தமிழகத்தில் ஏற்படும் என்றும் சொன்னார். "மார்ச் 20 இலை சின்னம் முடக்கப்படும்" என தமிழிசை சொன்னார்.

Kathir Velu

இரட்டை இலைக்கும் இரட்டை மின் விளக்கிற்கும் ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடியுங்கள்.

Anbalagan Veerappan

அதுல பாருங்க... 'இரட்டை' இலைக்கு பதிலா , "இரட்டை மின்கம்பம்"...

இதுகூட மோடியோட சதின்னு சிலபேரு சொல்லலாம்....ஏன் ஒத்த மின் கம்பமெல்லாம் சின்னமா இருக்க கூடாதா?!

Suresh Kumar Bharathi

இரட்டை இலை மாதிரி நம்ம சின்னம்னு குறைந்தபட்ச திருப்தி பட்டுக்கலாம்னு அண்ணன் ஒருத்தர் சொன்னார்.

அப்துல் கையூம்

வளர்மதியும், தினகரனும் தொப்பி போட்டுக் கொண்டு வந்து நிற்பார்கள். ஆனால் ஓ.பி.எஸ். மின்கம்பத்தை அதுவும் இரண்டு மின்கம்பங்களை தூக்கிக் கொண்டு வர முடியாதே?

Nelson Xavier

புதிய பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி கடந்த ஜனவரி மாதம் ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்தில் அளித்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத தேர்தல் ஆணையம், இரட்டை இலை தொடர்பாக கொடுத்த இரண்டாவது மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, சின்னத்தை முடக்கியிருப்பது சாதாரண விஷயமில்லை.

குமரேஷ் சுப்ரமணியம்

இரட்டை இலையவே குதிரை றெக்கைனு சொன்னவங்க நாங்க.. இரட்டை மின்விளக்க இரட்டை இலைனு சொல்ல மாட்டோமா..?

Karuppusamy

1. சின்னம் முடக்கம் - திராவிடக் கட்சிகளை ஒழித்து தன்னை முக்கிய கட்சியாக வளர்த்துக் கொள்ள காவிகள் சதி.

2. தினகரனுக்கு சின்னம் - ஜனாதிபதி தேர்தலில் எம்பிக்கள் ஆதரவு பேரம் முடிந்தது. தமிழகத்தில் மறைமுக பாஜக ஆட்சி. அப்போலோவில் இருந்தே இவங்க கூட்டணிதான்.

3. ஓபிஎஸ்க்கு சின்னம் - பாஜகவின் பி டீமுக்கு முறைகேடாக சின்னம். பிஜேபி அதிமுகவை உடைத்த நோக்கம் நிறைவேறியது.

இனி மெல்ல புறவாசல் வழியாக ஆட்சியைப் பிடிப்பது நடந்தேறும். இப்படித்தான் தீயா வேலை செய்யணும். கன்டினியூ...

srinivasan j

கடந்த தேர்தலில் 234 தொகுதியிலும் நிற்கும் ஒரே சின்னம் "இரட்டை இலை" தான் என்று தம்பட்டம் அடித்தார்கள். இப்போ ஒரு தொகுதிக்கே வழிய காணோம்!

கரூர் அமுதன்

இரட்டை இலை இருந்தாலே தினகரனுக்கு வாய்ப்பு கம்மி. இப்ப அதுவும் இல்ல.. தொயரந்தேன்...

Babu Rao

நமக்கு பிரச்சனை இல்லை, இரட்டை விரலை காட்டியே ஓட்டு கேட்கலாம். #இரட்டை மின்விளக்கு.

திருவட்டாறு சிந்துகுமார்

“மக்கள் திலகம் பொன்மனச்செம்மல்.அணிந்த தொப்பி இது..”

”புரட்சித்தலைவரின் தலையை அலங்கரித்த தொப்பி இது..”

“இரட்டை இலையின் மறு உருவம்தான் இரட்டை மின்கம்பம்”

“உங்கள் வாழ்வை ஒளியேற்றும் மின் கம்பம் இது!”

போன்ற அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தை கேட்பதற்காக ஆர். கே. நகருக்கு ஒரு விசிட் அடிக்கலாம்னு தோணுது!!

Jagan P K Srinivasan

சின்னம்மா சின்னம்மானு சின்னமே இல்லாம பண்ணீட்டீங்களே?!

Abdul Hameed Sheik Mohamed

ஓ.பி.எஸ் வழியாக அதிமுக கப்பலை ஓட்டை போட்டுகொண்டிருக்கும் அமித்ஷாவின் புன்னகையை தரிசிக்க முடிகிறது. ஆனால் அதிமுக இல்லாத இடத்தில் சீமான் வளர்ந்தாலும் வளர்வாரே தவிர பா.ஜ.க ஒரு போதும் வளர முடியாது.

Gokul

இரட்டை மின் கம்பம் சின்னத்தை பார்த்தால் காய்ந்து போன இரட்டை இலை போலவே இருக்கு.

Stanley Rajan

பன்னீர் அணிக்கு ஒரு அதிர்ஷ்டம். எம்ஜிஆர், ஜெயாவிற்கு பின் இரு விரல்களை காட்டும் வாய்ப்பு அவருக்கே கிடைத்திருக்கின்றது.

வெ. பூபதி

அன்று இரட்டை இலை சின்னத்தை ஜெ. மீட்டார். இன்று மீட்கப்போவது யார்?

Sasi Prabu

ஏப்பா இந்த இரட்டை இலை சின்னம் எங்க இருக்கோ அங்கதான் இருப்போம்னு சசிகலா அணில இருந்தவங்க எல்லாம் என்னப்பா பண்றீங்க?

வெங்கடேஷ் ஆறுமுகம்

"சூரியன்" உதிக்கும் வேளையில் "கையில்" டிபன் பாக்சோடு வேலைக்கு போன லைன்மேன் "தொப்பி"யுடன் "மின்கம்பத்தில்" ஏறி மேலிருந்து பார்த்த போது அருகிலுள்ள குளத்தில் "தாமரை"க்கு அடியில் "இலை" மறைந்திருந்தது.

Jothimani Sennimalai

ஒரு கட்சியின் உண்மையான தொண்டருக்கு தலைமையும், சின்னமும் நேசிப்பிற்குரியது. அவர்கள் கட்சியிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இரண்டையும் நேசித்துக்கொண்டே இருப்பார்கள்.அதுவும் அதிமுக தொண்டர்களில் பெரும்பாலானோர் உணர்வுபூர்வமான எளிய மக்கள். இந்தக் கணம் அவர்கள் சின்னம், தலைமை இரண்டையுமே இழந்துவிட்டார்கள். அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி அவர்களுக்காக வருந்துகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x