இன்று அன்று | 1964 அக்டோபர் 10: அகால மரணமடைந்தார் குரு தத்

இன்று அன்று | 1964 அக்டோபர் 10: அகால மரணமடைந்தார் குரு தத்
Updated on
1 min read

குரு தத். இந்தியத் திரையுலகில் மறக்க முடியாத பெயர். ‘ஜால்’, ‘பியாஸா’, ‘காகஸ் கி பூல்’ போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த கலைஞர்.

பெங்களூரில் பிறந்த குரு தத், இளம் வயதிலிருந்தே திரைப்படங்கள் மீது ஈடுபாடு காட்டினார். அவரது இயற்பெயர் வசந்தகுமார் சிவசங்கர் படுகோனே. கொல்கத்தாவில் வளர்ந்த அவர், வங்கக் கலாச்சாரத்தின் கூறுகளை உள்வாங்கிக்கொண்டார். தனது பெயரையும் குரு தத் என்று மாற்றிக்கொண்டார்.

இசைக் கலைஞர் ரவிசங்கரின் அண்ணன் உதய்சங்கர் அல்மோராவில் நடத்திவந்த இந்தியப் பண்பாட்டு மையத்தில் நிகழ்த்துக் கலை பயின்றார் குரு தத். 1944-ல் புனேயில் உள்ள பிரபாத் தயாரிப்பு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்தார். சிறிய வேடங்களில் நடித்ததுடன் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார். அந்தக் காலகட்டத்தில் தேவ் ஆனந்த், ரஹ்மான் போன்ற நடிகர்களின் நட்பு அவருக்குக் கிடைத்தது. இதற்கிடையே ஆங்கிலத்தில் சிறுகதைகள் எழுதிவந்தார். அப்போதுதான் புகழ்பெற்ற ‘பியாஸா’ திரைப்படத்தின் கதையை எழுதினார்.

1951-ல் தேவ் ஆனந்த் நடித்த ‘பாஸி’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பல படங்களில் நடித்தும், படங்களை இயக்கியும் புகழ்பெற்றார். சொந்த வாழ்வில் பல துன்பங்களால் அவதியுற்ற அவர், 1964-ல் இதே நாளில் தற்கொலை செய்துகொண்டார். எனினும், அது தற் கொலை இல்லை என்றும் மதுபானத்துடன் அதிமான தூக்க மாத்திரைகளை விழுங்கிய தால் மரணமடைந்தார் என்றும் சொல்லப் படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in