Last Updated : 16 May, 2017 04:10 PM

 

Published : 16 May 2017 04:10 PM
Last Updated : 16 May 2017 04:10 PM

கண்ணாடி.. முன்னாடி.. பின்னாடி!

கண்ணாடி எதுக்கு போடுறோம்? கண்ணுல என்னமோ கோளாறு இருக்குறனால தான! ஆனா இப்ப எல்லாம் யாரைப் பாத்தாலும் கண்ணாடி போட ஆரம்பிச்சுட்டாங்க. உண்மையிலேயே கண்ணுல பிரச்சினையா இல்ல ஸ்டைலுக்காக போட்டுருக்காங்களானு தெரியல..

முன்ன எல்லாம், டாக்டர் கண்ணாடி போடனும் சொன்னாலும், நம்ம மொகற அழகு குறைஞ்சுரும்னு கண்ணாடி போடாம அரை கண் பார்வையோட சுத்திகிட்டிருப்பாங்க.. ஆனா இப்ப கண்ணாடி போடுறதே ஸ்டைலா மாறும் அவங்க நினைச்சு கூட பாத்துருக்க மாட்டாங்க

கண்ணாடி போட்டுக்கறதுல ஒரு சின்ன சிக்கல் இருக்கு, “அட, ஏண்டா இந்த கருமத்த போட்டோம்”னு நானே யோசிச்சு இருக்கேன்.

”ஓய்.. கண்ணாடி.. வா முன்னாடி” ”ஹே சோடாபுட்டி”, ”நாலுகண்ணி”ன்னு கண்ணாடி பார்ட்டீஸை கிண்டல் பண்றதுக்கு லிஸ்ட் பெரிசா தான் போய்கிட்டு இருக்கு. இப்படி இருந்தா எப்படி கண்ணாடி போடத் தோணும்?

கண்ணு நல்லா தெரிஞ்சாலும், சும்மாவாச்சும் - கண்ணாடி போட்டா ஜீனியஸ் மாறி இருக்கும்னு வெத்துக்கு கண்ணாடி போடுற கெத்து பார்ட்டிகளும் இருக்காங்க. டாக்டர் எவ்ளோ சொல்லியும் 'நான் எல்லாம் கண்ணாடியே போட மாட்டேன்'னு ஒத்த கண்ணுல நிக்கற.. சாரி.. ஒத்த கால்ல நிக்கிற மாயக் 'கண்'ணன்களும் இருக்காங்க..

எல்லா விஷயத்துலயும் சினிமாவை இழுப்போம்.. இதுல மட்டும் ஏன் விட்டுவைக்கணும்?

தமிழ் சினிமால எப்பவுமே டீச்சர்னா கண்ணாடி போட்டு இருக்கனும் (டீச்சருக்கும் கண்ணாடிக்கும் அப்படி என்ன சம்பந்தத்த பாத்தாங்கனு தெரியல) டாக்டர்னா கண்ணாடி போட்டு இருக்கனும். அதுவும் ஆபரேஷன் தியேட்டர்ல இருந்து டாக்டர் வெளிய வந்து கண்ணாடிய கழட்டி “ஐ யம் சாரி” சொல்லுவாரு.. கண்ணாடி இல்லாட்டி அவர் என்ன பண்ணுவார் பாவம்! அதே மாதிரி சினிமால இந்த சயிண்டிஸ்ட், ப்ரொஃபஸர் எல்லாரும் கண்ணாடி போட்டு இருப்பாங்க

ஆனா மக்களே.. கண்ணாடிக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லைனு பாவம் அந்த காலத்துல எந்த அறிவாளிக்கும் தெரியல போல.

கண்ணாடிய வெச்சு பெரிய கம்பெனிகாரங்க வியாபாரம் பண்ணலாம்னு முடிவு எடுத்தவுடனே எல்லாம் மாறிப் போச்சு.. கண்ணாடி போடறதை ஃபேஷன், ட்ரெண்ட் ஆக்கி புதுப்புது மாடல்ல கண்ணாடி வந்துடுச்சு.

நம்மாளுங்களுக்கு நாம சொன்னா புரியாது.. விளம்பரத்துல வெளிநாட்டுக்காரியோ, வடநாட்டுக்காரரோ சொல்லிட்டாங்கன்னா போதும்... வாங்கி போட்டுகிட்டு தான் மறுவேலை!

சும்மா போற நாயை, சால்னா போட்டு கூப்டா மாதிரி, பக்கம்பக்கமா விளம்பரத்தை போட்டு இழுத்ததுல, பல பேரோட பர்ஸ் பழுத்துடுச்சு!

கல்யாண சமையல் மெனு மாதிரி, ஏகப்பட்ட வெரைட்டி.. ஆட்டோ கூல், செமி கூல், ஃப்ரேம்லெஸ்னு விதவிதமா வித்தியாசமா பெயரை வெச்சு கண்ணாடிய விற்க ஆரம்பிச்சுட்டாங்க, 'காதல் கொண்டேன்' 'விஐபி' படத்துல தனுஷ் போட்ட மாதிரி எல்லாம் கூட கண்ணாடி வாங்கி போடறாங்க.

சினிமாவை பாத்து முன்ன எல்லாம் புடவை, வளையல் தானே வாங்கினாங்க.. இப்போ எல்லாம் கண்ணாடியும் அந்த லிஸ்ட்ல சேர்ந்திடுச்சு.

கண்ணாடி போட கூச்சப்படுறவங்களுக்காக வந்தது காம்பேக்ட் லென்ஸ். கண்ணாடி போட சங்கோஜப்படறவங்க இப்போ லென்ஸ் தான் யூஸ் பண்றாங்க. அந்த லென்ஸ்லயும் சிவப்பு, நீலம்,பச்சைனு பஞ்சவர்ணமும் வர ஆரம்பிச்சுடுச்சு. பத்தாக்குறைக்கு நிறைய டிசைன்ஸ் வேற.

ஆனா, ரொம்ப வருஷமா கண்ணாடி போடுறவங்களால லென்ஸ்க்கு மாற முடியல. ஏன்னா, அவங்களைப் பொறுத்தவரை கண்ணு,மூக்கு, காது மாதிரி கண்ணாடியும் அவங்க முகத்துல ஒரு உறுப்பு!

கண்ணாடி போடறது உசத்தியும் இல்லை தாழ்த்தியும் இல்லை. அது கண்களை பாதுக்காக்க பயன்படுத்துற ஒரு கவசம், ஒரு கருவி. அவ்ளோ தான். தேவைப்படுறவங்க தேவைப்படுற நேரத்தில் பயன்படுத்திக்கட்டும்.

கண்ணாடி போட்டா லுக் வருதோ இல்லையோ தெரியாது. கண்ணாடி போடாட்டி எனக்கு தலைவலி வருது. ஆகவே கண்ணாடி போடாத சிறியோர்களே, நண்பர்களே.. நீங்க கண்ணாடி போடாதது எப்படி உங்க சௌகர்யமோ, அதே மாதிரி கண்ணாடி போடறது என்னிஷ்டம். கண்ணாடி போட்டவங்களை கிண்டல் பண்ணாதீங்க.

ஏன்னா, நீங்க முன்னாடி கண்ணாடி போடாட்டியும், பின்னாடி கண்ணாடி போட வேண்டி வரலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x