Last Updated : 26 Jun, 2017 09:52 AM

 

Published : 26 Jun 2017 09:52 AM
Last Updated : 26 Jun 2017 09:52 AM

உலகம் போற்றிய நபிகள் நாயகம்

நபிகள் நாயகத்தின் சிறந்த குணநலன்கள், நற்பண்பு களை உலகின் பல பகுதி களிலும் பல்வேறு காலக்கட்டங் களிலும் வாழ்ந்த மாபெரும் தலை வர்கள் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.

‘‘சர்வசக்தியும் படைத்த இறைவன் தனக்கு துணையாக நிற்கின்றான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நபி அவர் களுக்கு இல்லாதிருந்தால் இவ் வளவு பிரம்மாண்ட சாதனைகளை அவர்களால் செய்திருக்க முடி யாது’’ என்கிறார் வில்லியம் மூர்.

‘‘திருக்குர்ஆனுக்கும் இறைத் தூதர் முஹம்மத் அவர்களுக்கும் எனது விசுவாசத்தை வழங்குகிறேன்’’ - இது நெப்போலியனின் வரிகள்.

பெர்னாட்ஷா கூறும்போது, ‘‘முஹம்மத் நபியின் நற்குணங் கள் எனக்கு மிகவும் பிடித் திருக்கின்றன. மனித வாழ்க்கை பற்றிய அவரது கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன்’’ என்கிறார்.

‘‘அறம் செய்வது எப்படி என்பதைப் பற்றி தெளிவாகவும், திட்டவட்டமாகவும் வரையறுத்துக் கூறிய ஒரே ஒரு சட்ட மேதையாக விளங்குபவர் முஹம்மத் நபி ஒருவரே’’ என்கிறார் கிப்பன்.

‘‘ஆட்சிபுரியும் அமைச்சர்கள் நபி பெருமான் வகுத்த சீர்திருத் தங்களைப் பின்பற்றி நடக்க வேண்டும்’’ என்று வலியுறுத்து கிறார் மகாத்மா காந்தியடிகள்.

‘‘கண்மூடித்தனமான பழக்கங் களைக் கைவிடச் செய்து, மக்களை உயர்ந்த சமுதாயமாக மாற்றி நெருக்கடியான நேரங்க ளிலும் லட்சியங்களை நிறை வேற்றத் தவறாத கடமை வீரர் நபிகள் நாயகம்’’ என்று போற்றிப் புகழ்கிறார் அறிஞர் அண்ணா.

‘‘நபிகள் இவ்வுலகில் மக்களுக்குப் புரிந்த போதனைகள் அனைத்தும் உண்மையானவை, கருத்தாழம் மிக்கவை. விசுவாசம் கொள்ளத்தக்க வேதம் என்ற ஒன்று இருந்தால் அது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆன்தான்’’ - இது தாமஸ் கர்லைல் வாக்கு.

ஜி.ஜி.கெல்லட் கூறும்போது, ‘‘நபிகள் நாயகத்தின் வாழ்க்கை முறையைக் காட்டிலும் ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலேயே வேறு எங்கும் இல்லை. அவரைப் போல உலகின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களைக் காணுதலும் அரிது’’ என்கிறார்.

மகாகவி சுப்ரமணிய பாரதியார் கூறும்போது, ‘‘முஹம்மது நபி யிடம் கலங்காத நெஞ்சுடைய ஞானதீரமும் அழியாத நம்பிக்கை யும் இருந்தன. ஆதலால் அவருக்கு, எடுத்த காரியம் யாவினும் வெற்றி, எங்கும் வெற்றி, எதனிலும் வெற்றி. இடையிடையே நான் என் மனத்திற்குள் முஹம்மது நபி அவர்களைப் பற்றிச் சித்திரம் போட்டுப் பார்ப்பது வழக்கம். நடுப் பாலைவனத்தில் நள்ளிரவிலே தனி மணல்வெளியிலே, ஒட்டகை யின் மீது தனியாக ஏறிக் கொண்டு போகிறார். கேள்வி யாலும் நெடுங்காலத்து பக்தி யாலும், நிகரற்ற அன்பினா லும், ஞானத்தாலும் பக்குவப்பட்ட அவருடைய ஹ்ருதயம் அப்படிப் பட்ட இடத்தில் அல்லாவை நாடுகிறது. அங்கு ஞான ஒளி வீசிற்று. நபி அல்லாவைக் கண்டார்’’ என்று கூறுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x