Published : 13 Jun 2016 09:30 AM
Last Updated : 13 Jun 2016 09:30 AM

உங்களிடம் இருக்கின்றனவா இந்த புத்தகங்கள்?

வீடு திரைக்கதை, விமர்சனங்கள்

பாலுமகேந்திரா

வம்சி புக்ஸ் வெளியீடு, திருவண்ணாமலை.

தொடர்புக்கு: 9445870995

விலை: ரூ.200

தமிழ்த் திரையுலகில் நிகழ்ந்த அற்புதங்களில் ஒன்று பாலு மகேந்திராவின் ‘வீடு’ திரைப்படம். சந்தோஷ முகமாக வளைய வந்த தனது அம்மா, வீடு கட்டத் தொடங்கிய பின்னர் முற்றிலும் மாறிப்போனதைக் கவனித்திருந்த பாலுமகேந்திரா, அந்த அனுபவங்களின் அடிப்படையில் இப்படத்தை உருவாக்கினார். ‘வீடு’ திரைப்படத்தின் திரைக்கதை - உரை யாடலாக வெளிவந்திருக்கும் இப்புத்தகத்தில், அப்படம் குறித்து எழுத்தாளர்கள், விமர்சகர்கள் எழுதிய விமர்சனக் கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. இப்படம் குறித்த பாலு மகேந்திராவின் விரிவான பேட்டியும் இடம்பெற்றிருக்கிறது.

ஏ.கே.செட்டியார் படைப்புகள்

பதிப்பாசிரியர்: கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

சந்தியா பதிப்பகம் வெளியீடு

தொடர்புக்கு: 044-24896979

விலை: ரூ.2,000

ஏ.கே.செட்டியாரைப் போன்ற ஆளுமைகள் தமிழில் அபூர்வம். அவர் எழுதிய ‘உலகம் சுற்றும் தமிழன்’ எனும் நூலின் தலைப்பே அவரைக் குறிக்கும் அடைமொழியாயிற்று. அந்த அளவுக்குப் பயணம் செய்தவர். தனது அனுபவங்களை எழுத்தாக்கியவர். கடும் உழைப்பு, தன்னை முன்னிறுத்திக்கொள்ளாத தன்மை, துணிச்சலான நடவடிக்கைகள் என்று தொடர்ந்து இயங்கிய ஏ.கே.செட்டியார் மூலம் தமிழுக்குக் கிடைத்த ஆவணங்கள் ஏராளம். காந்தியைப் பற்றி அவர் எடுத்த ஆவணப்படம் அவரது உழைப்புக்கும், வரலாற்றின் மீதான பார்வைக்கும் உதாரணம். அவர் நடத்திவந்த ‘குமரிமலர்’ இதழில் அவர் எழுதாத விஷயங்களே இல்லை எனலாம். இரண்டு தொகுதிகளாக வெளியாகியிருக்கும் இந்தத் தொகுப்பில் அவரது கட்டுரைகள், அவருக்கு எழுதப்பட்ட கடிதங்களுடன், அவர் எழுதிய சிறுகதையும் இடம்பெற்றிருப்பது தனிச் சிறப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x