Last Updated : 29 Jun, 2017 10:36 AM

 

Published : 29 Jun 2017 10:36 AM
Last Updated : 29 Jun 2017 10:36 AM

இதுதான் நான் 82: மீண்டும் சந்திப்போம்!

டைரக்‌ஷன் செய்யும்போது நம்மை சுத்தி இருக்கிறவங்களுக்கு கோபமே வர விடாம, முழு டென்ஷனையும் நானே எடுத்துப்பேன். அப்படி இருந்தாத்தான் படத்தை ஆரம்பிப்பதில் இருந்து, முடியிற வரைக்கும் சரியா மேனேஜ் செஞ்சு, ஒரு ‘மூடு’ல கொண்டுபோக முடியும். அதனாலதான் ஒரு படத்தின் இயக்குநரை ‘கேப்டன் ஆஃப் தி ஷிப்’னு சொல்றோம்.

அதுவே ஒரு பாட்டுக்கு கொரியோ கிராஃப் செய்யும்போது நாலு நாட்களுக் குள்ள வேலை முடிஞ்சுடும். படத்தோட தயாரிப்பாளர், இயக்குநருக்கு என்ன வேணுமோ அதை ஹீரோ, ஹீரோயினை வெச்சி செய்து முடிச்சிடுவோம். டைரக்‌ ஷன்னா, முழுமையா இருக்கணும். ஆனா, கொரியோகிராஃபியில வேலை முடிஞ்சதும் அந்த படத்துலேர்ந்து நாம் வெளியிலேயும் வந்துடுவோம்.

நான், டைரக்‌ஷன்ல இருக்கும்போது வேற மாதிரியும், கொரியோகிராஃப் செய்யு போது வேற மாதிரியும், நடிக்கும்போது வேற மாதிரியும்தான் இருப்பேன்னு முன் னாடியே சொல்லியிருக்கேன். அதில் டைரக்‌ ஷன் பண்ணும்போதும், நடிக்கும்போதும் சூழலுக்குத் தகுந்த மாதிரி அனுசரிச்சுப் போயிடுவேன். ஆனா, கொரியோகிராஃபி பண்ணும்போது எனக்குன்னு ஒரு பிரின்சி பிள் இருக்கு. அதுக்குள்ள ஆர்டிஸ்ட் வந் தாகணும்.

இங்கே எதுக்காகவும் அனுசரிச் சுப் போகிற வேலையெல்லாம் இல்லை. அத னால்தான் நான் டைரக்‌ஷன் பண்ற படத்தில் பாட்டுக்கு நான் கொரியோகிராஃபி பண் றது இல்லை. ஏன்னா, திடீர்னு நான் ஒரு இடத்துல கோபப்பட்டு, அதுக்கு ஆர்டிஸ்ட் ‘என்ன இப்படி?’ன்னு ஏதாவது நினைச்சுட் டாங்கன்னா, அந்த நினைப்போடவே படம் முழுக்க டிராவல் ஆகணும். அப்படி வேணாமேன்னுதான் நான் டைரக்‌ஷன் பண்ற படங்களில் பெரும்பாலும் நானே கொரியோகிராஃபி பண்றதைத் தவிர்த்துவிடுவேன்.

அதையும் மீறி, டைரக்‌ஷன் பண்ணும் போது, ‘நீங்கதான் இந்தப் பாட்டை கொரியோ கிராஃபி செய்யணும்!’னு ஒரு சூழல் உரு வாகும். அப்போவெல்லாம், ‘கொரியோ கிராஃபரா நான் இந்த மாதிரிதான் இருப் பேன்’ன்னு முன்னாடியே சொல்லிடுவேன்.

அதே மாதிரி, கொரியோகிராஃபரா ஒரு பாட்டுக்குள்ள வரும்போது அப்போதான் அதில் டான்ஸ் ஆடப்போற ஆர்டிஸ்ட் பற்றி நமக்குத் தெரியும். என்னோட கிரியேட்டி விட்டிக்கு அந்தப் பாட்டை உருவாக்கி, அதுக் குள்ள ஆர்டிஸ்ட்டை கொண்டு வருவேன். அதுவே, நான் டைரக்‌ஷன் பண்ற படத்துல வர்ற ஆர்டிஸ்ட்னா, ‘இவங்களால இதை செய்ய முடியும்? அதை செய்ய முடியும்னு எனக்குத் தெரியும். அதனால கிரியேட்டி விட்டி குறைஞ்சிடும். இதெல்லாம்தான் காரணம்!

கடந்த ஒன்றரை வருஷத்துக்கும் மேல உங்களிடம் ஒரு கொரியோகிராஃபராக, நடிகனாக, இயக்குநராக, தயாரிப்பாளராகப் பேசிட்டிருந்தேன். முதன்முதலா இந்தத் தொடரை ஆரம்பிக்கும்போது எதுவுமே யோசிக்காமல் ஒப்புக்கொண்டேன். எனக்கு ‘நினைவுகளே பிடிக்காது’ன்னு முதல் வாரத் தில் பேசத் தொடங்கினேன். இன்றைக்கு என்னோட இவ்வளவு நினைவுகளை உங்களோடு பகிர்ந்திருக்கேன்.

இத்தனை வாரங்களா நான் எழுதின தையே ஒரு 60 வயசுக்குப் பிறகுகூட எழுதி யிருக்கலாம். ஆனா, அப்போ நிறைய மறந் திருப்போம். பூமியைத் தோண்டத் தோண்ட தண்ணீர் வர்ற மாதிரி சொல்லச் சொல்ல சின்ன வயசுலேர்ந்து நடந்ததெல்லாம் வந்துச்சு. அதெல்லாம் எனக்கும் ஆச்சர்யத் தைத் தந்துச்சு.

இந்தத் தொடர்ல முடிஞ்சவரைக்கும் மத்த வங்களைப் பாதிக்காமல் ஜாலியான விஷயங்களை மட்டுமே எழுதினதா நான் நினைக்கிறேன். இத்தனை வாரமா இதை படிக்கும்போது உங்களில் யாரை யாவது பாதித்திருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். நிறையப் பேருக்கு பிடிச்சு பாராட்டவும் செய்தாங்க. இந்தத் தொடரை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே என்னோட ஃபிரெண்ட்ஸ்கிட்ட, ‘‘தி இந்து தமிழ் நாளிதழ்ல இப்படி ஒரு தொடர் எழுதப் போறேன்டா?’’ன்னு சொன்னேன். அதுக்கு அவங்க நம்பவே இல்லை. தொடர் எழுத ஆரம்பபிச்சப் பிறகு, ‘‘ஆமாம்டா!’’ன்னு ஜாலியா சிரிச்சிட்டே தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சாங்க.

சின்ன வயசுல என்னோட அப்பா, ‘தி இந்து’ பேப்பர் படிக்கச் சொல்லி, அதுக்கு தமிழ்ல மீனிங் கேட்பார். அப்போவெல்லாம் அந்தப் பேப்பரைப் பார்க்கும்போதே பயமா இருக்கும். பள்ளிக்கூட நாட்கள்லேர்ந்து வாழ்க்கை வரைக்கும் நிறைய நிறைய பயனுள்ள விஷயங்களைக் கொடுத்த மதிப் புக்குரிய பத்திரிகை இது.

அந்தக் குழுமத் தில் இருந்து வெளிவரும் நாளிதழில், அது வும் தமிழில் ஒரு தொடர் எழுத வாய்ப்பு அமைந்தது பெரிய விஷயம்! இவ்வளவு விஷயங்களை என் லைஃப்ல நான் எங்கே யும் பேசினதே இல்லை. எந்தப் பேட்டியிலே யும் சொன்னதும் இல்லை. அதை ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் மூலமா ஷேர் பண்ணிக்கிட் டதை சந்தோஷமா நினைக்கிறேன்.

சென்னை, மும்பை, அமெரிக்கான்னு தொடர்ந்து பயணங்களில் இருக்கும் போதும், படப்பிடிப்புக்கு இடையேயும், கடந்த ஒன்றரை வருஷம் இந்தத் தொடர் கூடவே பயணித்ததை ரொம்பவே ஜாலியான அனுபவமாக நான் பார்க்கிறேன்.

என்னோட அம்மா, அப்பா, என் பசங்க, என் லைஃப், என் பள்ளிக்கூடம், என் ஃபிரெண்ட்ஸ், சினிமா கேரியர்னு நிறைய விஷயங்களை உங்களுடன் நான் பகிர்ந்துக் கிட்டேன். நானே சில ப்ளாஷ்பேக் இடங்களை சொல்லும்போது கண் கலங்கியிருக்கேன். இந்தத் இடத்தை எழுதும்போதுகூட, ‘அடடா… இந்தத் தொடர் முடியப் போகுதா!’ன்னு நினைக்கவும் செய்றேன். என்ன பண்ண முடியும்? ஸ்கூல்ல 12- ம் கிளாஸ் முடிஞ்சதும் வகுப்பைவிட்டு கிளம் பித்தானே ஆகணும். அந்த மாதிரிதான் லைஃப்ல ஜாலியோ, கஷ்டமோ ஏதோ ஒரு இடத்தில் முடிவு இருக்கத்தானே வேணும். அப்புறம்கூட இந்தத் தொடர்ல.. ‘இதை சொல்லியிருக்கலாமே? அடடா, அந்த விஷயத்தை மிஸ் பண்ணிட்டோமே’ன்னு நினைக்கத் தோணலாம். என்ன பண்றது, மிஸ் ஆவதுதானே வாழ்க்கை!

என்னோட லைஃப்ல இன்னும் நிறைய விஷயங்கள் வரப் போகுது. அதையெல்லாம் இன்னும் ஒரு 20 வருஷங்களுக்கு அப்புறம் திரும்பவும் இதே மாதிரியான ஒரு தொடர் மூலம் உண்மையா பகிர்ந்துப்பேன்னு நினைக்கிறேன். அப்போ இந்த உலகம் எப்படி இருக்கும்னு தெரியலை. அதனால் இந்தத் தொடருக்கு இப்போதைக்கு ஒரு ‘பிரேக்’ விட்டுடலாம்னு தோணுது.

எல்லோருக்கும் நன்றி!

எழுத்தாக்கம்: ம.மோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x