

மகேஸ்வரி
நான் சென்னைப் புத்தகக்காட்சிக்கு வருவது இதுவே முதல்முறை. இணையத்திலேயே அதிகம் படிக்கும் எனக்கு, இங்கு வந்து பார்த்த பிறகு புத்தகம் வாங்கிப் படிக்க ஆர்வம் பிறந்தது. ‘நீயும் நானும்’, சுஜாதாவின் ‘கடைசிப் பக்கங்கள்’, ‘புல்வெளி தேசம்’ போன்ற புத்தகங்களை நான் வாங்கினேன்.
ப்ரியம்வதா
இந்த வருடப் புத்தகக்காட்சியில் 30-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வாங்கினேன். விக்ரமாதித்யன் கவிதைகள், இமையம் எழுதிய ‘எங்கதெ’, அழகியபெரியவனின் ‘ஞாபக விலங்கு’, யாழன் ஆதி, புதிய மாதவி, கல்யாண்ஜி கவிதைகள் என்று செம்ம வேட்டை!
அருள்செல்வன்
புத்தகக்காட்சியில் தமிழ், ஆங்கிலப் புத்தகங்கள் நிறைய வாங்கினேன். பா.ராகவனின் ‘நிலமெல்லாம் யுத்தம்’ நான் வாங்கிய புத்தகங்களில் முக்கியமானது.