

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கு முன் விமானிகளுக்கு அளிக்க வேண்டிய சம்பள நிலுவையை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.
நிதிச் சிக்கல்களை சந்தித்ததால் 2012-ம் ஆண்டிலிருந்து பணியாளர்களின் சம்பளத்தை ஏர் இந்தியா பிடித்தம் செய்தது. சில குறிப்பிட்ட பிரிவு பணியாளர்களின் ஊதிய விகிதங்களையும் மாற்றியமைத்தது. இவர்களது நிலுவைத் தொகைகள் இன்னும் வழங்கப்படவில்லை.
இந்த வகையில் நிறுவனத்தின் 27,000 முன்னாள் பணியாளர்கள், விமானிகள், விமான சிப்பந்திகள் உள்ளிட்டவர்களுக்கு அளிக்க வேண்டிய தொகை ரூ.1,200 கோடியாக உள்ளது. இதுதவிர விமானிகளுக்கு ரூ.400 கோடி சம்பள நிலுவை அளிக்க வேண்டியுள்ளது என்று மூத்த விமானிகள் தெரிவித்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிறுவனத்தின் தலைவ ராக அஸ்வினி லொகானி பொறுப் பேற்றபோது, இந்த நிலுவைத் தொகைகளை படிப்படியாக அளிப்பதாக உறுதி அளித் திருந்தார்.
இந்த நிலையில் நஷ்டத்தில் இயக்கும் நிறுவனத்தை சீரமைப்பதற்காக ஏர் இந்தியாவை தனியாருக்கு அளிப்பது உள்ளிட்ட பல வழிகளை அரசு ஆராய்ந்து வருகிறது. இதனால் நிலவும் நிச்சயமற்ற சூழல் காரணமாக விமானிகள் சம்பள நிலுவையை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர். உயர் அதிகாரிகள் அளவில் முடிவுகள் எடுப்பதற்கு முன்னர் முதலில் ஊதிய நிலுவையை அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்திய விமானிகள் குழு சார்பாக பேசிய விமானி ஒருவர், ஏர் இந்தியாவை விரைவில் தனி யார்மயமாக்க அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த செய்தியை வரவேற்கிறோம். ஒருவேளை இது நடந்தால் தொழில் முறையிலான நிர்வாகத்தின் கீழ் நிறுவனம் செயல்படும் என நம்புகிறோம். அரசின் அதிகபடியான தலையீடு கள் இல்லாத பணிச்சூழலில் பணியாற்ற விரும்புகிறோம் என்றும் குறிப்பிட்டார்.
ஆனால் தனியார் மயமாக்கு வதற்கு முன்னர் எங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைகளை முதலில் அளியுங்கள் என்று குறிப்பிட்டார். இந்த விமானிகள் குழுவில் ஏர் இந்தியாவின் சுமார் 500 விமானிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.