Published : 29 Sep 2018 12:25 pm

Updated : 29 Sep 2018 12:25 pm

 

Published : 29 Sep 2018 12:25 PM
Last Updated : 29 Sep 2018 12:25 PM

நெட்டிசன் நோட்ஸ்: பரியேறும் பெருமாள்- எங்கும் புகழ் துவங்கட்டும்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு நடித்து, பா.இரஞ்சித் தயாரித்துள்ள படம் ’பரியேறும் பெருமாள்’. வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் குறித்த நெட்டிசன்களின் கருத்து, இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Thirumalai @Thiruma65325323

ஒடுக்கப்பட்ட மக்களின் சிக்கல்களைப் புரிந்துகொள்ள டாக்டர் அம்பேத்கர் கண் கொண்டு பார்க்க வேண்டும். இயக்குனர் மாரி செல்வராஜுக்கு அந்தக் கண் கிடைத்திருக்கிறது .

#பரியேறும்பெருமாள் - # தாருமாறு தக்காளிச் சோறு

Siva @tamilvellum

பரியேறும் பெருமாள் திரைப்படம் நிறைவடைந்தது. ஆனால் அது ஏற்படுத்திய தாக்கம், எண்ண அலைகள் இன்னும் என்னுள்..

Praveen Kumar @ComradePraveenK

பரியேறும் பெருமாள்- இந்திய சினிமாவின் பொக்கிஷம். #Masterpiece

மொ.சங்கர்குரு @dreamzguru

'பரியேறும் பெருமாள்' - தமிழ்த் திரையுலகின் ஒரு பரிணாமம்.

'எங்கும் புகழ் துவங்கட்டும்'

Director Rajumurugan @Dir_Rajumurugan

'பரியேறும் பெருமாள்' பார்த்தேன். மிக மிக முக்கியமான படம். முதல் காட்சியில் அதிரும் இதயம் கடைசி வரை அடங்கவில்லை. இந்த நிலமெங்கும் விஷம் போல் பரவியிருக்கும் சாதியத்தின் முகத்தில் மோதி மிதிக்கிறது இந்தப் படைப்பு.

Shashu @shashusmiles

பரியேறும் பெருமாள். - கமர்ஷியல் படங்களுக்கு தலித்திய ஜிகினா தூவாமல், நிஜமாவே சாதியப் பிரச்சினைகள அதுக்கு உண்டான தளத்துல நின்று பேசியிருக்கிறது இப்படம். சில குறைகள், வேறுபாடுகள் இருந்தாலும் அது பேசும் அரசியல் மிக நேர்த்தியாகவும் பாசிடிவாகவும் இருக்கிறது.

cartoonist bala @cartoonistbala

தடைகள் தகர்த்து மாரியின் குதிரை பறக்கும்.. மகிழ்ச்சி.. :)

நெல்லை சிவா @nellaisivapt

சாதியக் கொடூரத்தின் இரு வேறு அடுக்குகளில் உள்ள மனிதர்களின் மனதை நெருக்கமாகப் படம் பிடித்துக் காட்டியதன் மூலம் தமிழின் முக்கிய சினிமாக்களில் ஒன்றாக கம்பீரமான நடையைத் தொடங்கியிருக்கிறான் பரியேறும் பெருமாள்.

Murugan Manthiram @muruganmantiram

எவர் மீதும் காழ்ப்புணர்ச்சி ஏவாமல் யதார்த்தத்தையும் அன்பையும் மானுட சமத்துவத்தையும் பேசும் பரியேறும் பெருமாள்.

Senthil kumaran @Senthil74107093

பரியேறும் பெருமாள்... மனதில்

குடியேறும் பெருமாள்.

Saran Ram

நேர்த்தியான எழுத்தும் இயக்கமும் மாரி செல்வராஜை உச்சிமுகர்ந்து பாராட்ட வைக்கிறது. படத்தைத் தயாரித்த பா.இரஞ்சித்துக்கு அவரின் `மகிழ்ச்சி' என்ற வார்த்தையைத் தவிர சிறப்பாக வேறு என்ன சொல்லிவிட முடியும்?

Ag Sivakumar

பரியேறும் பெருமாள் தமிழகம் மட்டுமல்ல.. பெருமாள் பூமியான ஆந்திரம் முதல் தேசத்தின் பல்வேறு இடங்களில் கடிக்கக் காத்துக்கொண்டிருக்கும் ஆதிக்க மனோபாவத்தை கல் கொண்டு விரட்டக் காத்திருப்போரின் ஒட்டுமொத்த கூக்குரல், ஆக்ரோஷம். உயிர்வலி.

Eniyan Ramamoorthy

ஒரு நூற்றாண்டு கால திரைமொழியில் இத்தனைத் தெளிவாக சாதியத்தையும் அதன் வன்மத்தையும், தீர்வையும் கையாண்ட திரைப்படம் வேறெதுவும் இருப்பதாக நினைவில்லை.

மணா மணா

மிகையில்லாத நடிப்பு. கூர்மையான உரையாடல்கள், கவனமாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிற நடிகர்கள், பொருத்தமான பின்னணி இசை, செயற்கைத்தனம் இல்லாத இறுதிக்காட்சி என்று பார்வையாளர்களைக் கடைசிவரை தக்கவைத்துக் கொள்கிற திரைக்கதையுடன் வெளிவந்திருக்கிறான் பரியேறும் பெருமாள்!

Kavin Malar

திரையரங்கு சென்று பரியனைப் பாருங்கள். உணர்வுபூர்வமாக உங்களை வென்றெடுப்பான் அவன். நீங்கள் எச்சாதியாய் இருந்தாலும், சாதியற்றவராய் இருந்தாலும், எம்மதத்தைச் சார்ந்தவராய் இருந்தாலும்!

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author