Published : 20 Sep 2018 12:07 PM
Last Updated : 20 Sep 2018 12:07 PM

நெட்டிசன் நோட்ஸ்: இந்தியா vs பாகிஸ்தான் - பரபரப்பா இருக்கும்னு நெனச்ச மேட்ச்...

ஆசியக் கோப்பை  போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் இடையான ஆட்டம் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்....

Arvind

‏பதட்டமே இல்லாம பாத்த மொத மேட்ச் இதான்டா.. #IndvsPak

விவகாரமான வித்தகன்

‏இந்தியா பாகிஸ்தானுக்கு தயாரா தான் வந்து இருக்கு பட் பொசுக்குன்னு இந்த ஹான்காங் வந்து கன்ப்யூஸ் பண்ணிட்டானுங்க

மழைக்கால Royal Enfield

‏ஹாங்காங் கொழந்தப் பசங்க, பாவம் கதறக்கூடாதுன்னுதான் வலிக்காத மாதிரி மெதுவா அடிச்சோம்     , பங்காளி பாகிஸ்தான அப்படி விட முடியுமா, அதான் ரத்தம் வர நசுக்க வேண்டியிருக்கு

Murugesan

‏ஹாங்காங் எதிராக போராடி வென்ற இந்திய அணி பாகிஸ்தானை பந்தாடியது எதிர்பார்த்ததே.பாகிஸ்தான் என்றாலே ஒரு டீம் ஸ்பிரிட்தான்...வாழ்த்துக்கள்..!

நீலா நீலவண்ணன்.

‏கிரிக்கெட்..

ஹாங்காங் போன்ற

சொத்தை அணியோடு

சொதப்பல் வெற்றி...

 

பாகிஸ்தான் போன்ற

பலமான அணியோடு

அசத்தல் வெற்றி....

வாழ்க்கையும் இதுபோல சுவாரஸ்யங்களைக் கொண்டதுதான்....

 

Greesan  ✨

‏அந்தபக்கம்

அக்தர் , சமி

இந்தபக்கம்

சேவாக் , டெண்டுல்கர் ஆடும்பொழுது இந்தியா பாகிஸ்தான் மேட்ச் பார்த்த பீல் கிடைத்ததா இன்று ?  

 இன்றைய ஆட்டத்தில் அந்த பீல் வரல

Freak

‏பாகிஸ்தான் தான் கஷ்டம்னு நெனச்சா அவங்கள ஒத்த கையாள அதுவும் லெப்ட் ஹேண்ட்ல டீல் பண்றாங்க

தெனாலி™   மய்யம்

‏ரோஹித் பாகிஸ்தான் டீமை லெப்ட் ஹேண்ட்ல டீல் செஞ்சிட்டான் போல...

Yuvaraj K.v

‏பச்ச சட்டய பாத்தாலே அடிச்சு நொருக்குவோம்..பாவம் பாகிஸ்தான் கிழி கிழி

பொறியாளன்

‏உங்களால பாகிஸ்தான் மேட்ச் பாக்குற பீலிங் கே இல்லடா...டேய் பாகிஸ்தானியன்ஸ் என்னடா பண்றீங்க....

ரமேஷ்.ஏ

‏அசால்டா ஜெயிச்சிடலாம்ங்கற மேட்ச் பரபரப்பா இருந்துச்சி....

பரபரப்பா இருக்கும்னு நெனச்ச மேட்ச் சப்புனு போய்டுச்சி....

Chinna Nanban

‏சபாஷ் சரியான போட்டினு சொல்ற அளவுக்கு இல்ல...!

இந்தியா வெற்றி #மகிழ்ச்சி

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x