

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்துள்ள 'சர்கார்' படத்தின் ‘சிம்டாங்காரன்’ என்ற ஒரு பாடல் திங்கட்கிழமை மாலை வெளியானது.
இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள் அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்.....
Mr.கெட்டவன்
சாங் நல்ல இருந்த ரிங் டோனா வைக்கலாம்னு இருந்தேன்...
ப்ச் ...
RAJU
பாட்டோட முதல் சொல்லோட பொருளுக்கு தமிழ்ல முனைவர் பட்டம் பெற்றவர் தேவைப்படுது, மத்த சொற்களுக்கு தொல்காப்பியர் வரணும்னு நினைக்கிறேன்
Srinivasan Rahul
இன்னைக்கு விஜய் என்பதாலேயே ரஹ்மான் இசை நல்லாயில்லை என்பவர்கள் நாளை தம் இஷ்ட நடிகருக்கு அவர் இசையமைக்கும்போது ஆஹா ஓஹோ என்று புகழ்வது இயல்புதான்
ᎢɦᎪLA ᎪռᎪռɖɦ
நல்லா இருக்கு
நல்லாதான்யா இருக்கு
சுரேகா
இளையராஜாவுக்கு ராக்கம்மா கையைத் தட்டு, ரஹ்மானுக்கு #Simtaangaran
Krish
இந்தப் பாட்டை எப்பிடிக் கேட்டாலும் ஒரு முடிவுக்கு வர முடியலையே ...ஒரு தடவ மியூச்சலா கேட்டுப் பாப்போம்.
ramasamy mani
டண்டணக்கா, ஏ டணக்கு டக்கா வெல்லாம் எவ்வளவு கவித்துவமான பாட்டுகள் என்பது, 'சர்கார்' பாட்டு கேட்டதற்கப்புறம்தான் தெரியுது.
கார்த்திக்
ஏன்டா இந்த சிம்டாங்காரன் பாட்டுக்கு நம்ம அனிருத் மியூஸிக் போட்டிருந்தா ஆலுமா டோலுமா பாட்டுக்கு டஃப் கொடுத்து இருக்கலாம் இல்ல டா.