

இந்திய சுதந்திரத்தின் மறக்க முடியாத புரட்சியாளர்களில் ஒருவரான ஷாகித் பகத்சிங்கின் 111-வது பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
பஞ்சாப் மாநிலம் பங்கா என்ற கிராமத்தில் செப்டம்பர் மாதம் 1907-ல் பிறந்த பகத் சிங்குக்கு தேசபக்தியும், சீர்திருத்த சிந்தனைகளும் இயல்பாகவே இருந்தன. பகத்சிங்ககை முழு விடுதலை போராட்டத்தில் ஈடுபட வைத்த முக்கிய தருணம் ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம்.
லாகூர் தேசியக் கல்லூரியில் சேர்ந்திருந்த பகத்சிங், ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை தொடர்ந்தே நாட்டின் விடுதலைக்காகத் தன் வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணிக்க முடிவு செய்தார்.
புத்தக காதலரான பகத்சிங் பொதுவுடைமைக் கொள்கைகளால் கவரப்பட்டு, பல சுதந்திரப் போராட்டப் புரட்சி இயக்கங்களுடன் தொடர்ப்பை ஏற்படுத்திக் கொண்டார்.
லஜ்பத்ராய் மரணத்துக்கு பழிவாங்க நினைத்த பகத்சிங் தன் நண்பர்களுடன் இணைந்து அதற்கு காரணமாக இருந்த காவல் அதிகாரியை கொலை செய்தார்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட பகத்சிங்குக்கு அவரது நண்பர்கள் ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்திய விடுதலையின் போராட்டத்தில் இளைஞர்களின் அடையாளமாக இருந்த பகத்சிங் 24-வது வயதில் (1931) ஆங்கில அரசால் தூக்கிலிடப்பட்டார்.