

மறைந்த முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்றுவித்தவருமான அண்ணாவின் 110-வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நெட்டிசன்கள் அண்ணாவின் சாதனைகளையும், அவரது பிரபலமான கவிதைகளையும் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்....
Stalin Raj
காஞ்சி தந்த காவியத் தலைவன் பேரறிஞர் பெருந்தகை #அண்ளாவின் 110-வது பிறந்த நாளில் வணங்குவோம்.
Aakash Johannes Russell
இந்தியா,
மறந்த மறைத்த,
ஓர் சகாப்தம்!
பேரறிஞர் அண்ணா!
இதுவும் கடந்து போகும்
முன்னோர்கள் இவ்வழி சென்றனர், எனவே அடியேனும் அவ்வழியே என்று ஆராயாது சொல்வது விஷய விளக்கமல்ல, விவேகமல்ல , வாதமுறையும் ஆகாது. அது , கேவலம், மூடநம்பிக்கை..
_அறிஞர் அண்ணா
Kalai
உணவின்றி உடையின்றி ஏழைகள் தவிக்க, அந்த ஏழைகளின் தோள் மீது அமர்ந்தபடி , அடிக்கடி ஊர்கோலம் வருகிறாரே அவர்களின் துயரம் தீர்க்காத ஆண்டவன் .. இது தகுமா..?
_பேரறிஞர் அண்ணா
Jaguar Jerry
உம்மை இகழ்ந்து
பேச நினைப்பவர்கள்- கூட
உம்மை அண்ணா என்று
உம் பெயரை
புகழ்ந்து அழைத்துதான்
பேச முடியும்.
Ravi Raju
பெரும்பான்மையினரால் பேசப்படுவதால் இந்தி பொதுமொழியாக்கப்பட்டது என்பதற்கு அண்ணாவின் பதில்
“ஏன் புலி மட்டும் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது? உண்மையில் பெரும்பான்மையாக இருப்பது எலி தானே அல்லது ஏன் மயில் தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டது?உண்மையில் பெரும்பான்மை பறவை காகம் தானே
சகாவே
ஏழைகளை வஞ்சிக்க ஓர் ஏற்பாடு அதற்குப் பெயர் மதம்..
உழைக்கிறவனை ஒடுக்குவதற்கு ஓர் இயந்திரம் அதற்கு பெயர் சாதி..
பகற்கொள்ளை அடிப்பதற்கு ஒரு திட்டம் அதற்கு பெயர் பூஜை, சடங்கு, தட்சணை..
Arthi Sankar
அன்புள்ள தம்பி,
மக்களிடம் செல்,
அவர்களுடன் வாழ்,
அவர்களிடமிருந்து கற்றுக்கொள்,
அவர்களை நேசி,
அவர்களுக்கு சேவை செய்,
அவர்களுடன் சிந்தனை செய்,
அவர்களுக்கு தெரிந்தவற்றிலிருந்து தொடங்கு,
அவர்களிடம் இருப்பதை வைத்து கட்டமைப்பு செய்.
நித்யா
அப்பாவியாக தோற்றமளித்த அறிஞன். எதிராளியையும் வசப்படுத்திய வைசியன். குரலால், எழுத்தால், ஆண்ட மன்னன். தமிழ்நாட்டின் அண்ணன் அறிஞர் அண்ணா.
இன்று அறிஞர் அண்ணா பிறந்த நாள்.
RAJU
பெரியார் என்னும் காட்டாற்று வெள்ளத்தின் மதகாக இருந்தவர் அண்ணா..
jawahar parthiban
இந்திய மொழிகளில் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்ற தகுதியைப் பெறுமேயானால், இந்தியாவின் ஒற்றுமை மிக விரைவில் சீர்குலையும்.- அறிஞர் அண்ணா
Ram Thirumurugan
ஓராண்டுக்கு முன்னால் நான் பதவிக்கு வந்தேன். மூன்று முக்கியமான காரியங்களைச் செய்திருக்கிறேன். ஒன்று சுயமரியாதை திருமண சட்ட அங்கீகாரம். இரண்டு தாய்த் திருநாட்டுக்கு தமிழ்நாடு என பெயர் மாற்றம்.மூன்று தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை என இருமொழிக் கொள்கை அறிவிப்பு.
தமிழ்
இந்தியாவின் தலைசிறந்த
அறிவாளியான
அரசியல் வித்தகர்
தந்தை பெரியார்
மனிதா!
நீ யாருக்கும் தலை வணங்காதே
நிமிர்ந்து நட! கைவீசிச் செல்!
உலகைக் காதலி!
செல்வரை, செருக்குள்ளவரை,
மதவெறியரைத் தள்ளி எறி!
மனசாட்சியே உன் தெய்வம்!
உழைப்பை மதி, ஊருக்குதவு.
உனக்கு எட்டாத
கடவுளைப் பற்றிப் பிதற்றாதே!
சிந்தனை செய்! செயலாற்று.
Akura
மனிதா!
நீ யாருக்கும் தலை வணங்காதே
நிமிர்ந்து நட!
கைவீசிச் செல்!
உலகைக் காதலி!
Murali
ஒரு ஜனநாயக சமுதாயத்தில் கருத்துகளைச் சொல்வதற்கு தடையோ சுதந்திர உணர்வுக்குஅழிவு தரும் நடைமுறைகளோ கண்டிப்பாக இருக்கக் கூடாது.
#HBDAnna
king No 4
மதராஸி சென்னைன்னு இருந்த பேர தமிழ்நாடுன்னு மாற்றியவர்