கவலைப்படாதீங்க புவி... இறுதிப் போட்டியில் ஜெயிக்கலாம்: இந்திய வீரர்களுக்கு ஆறுதல் கூறி வைரலான சிறுவன்

கவலைப்படாதீங்க புவி... இறுதிப் போட்டியில் ஜெயிக்கலாம்: இந்திய வீரர்களுக்கு ஆறுதல் கூறி வைரலான சிறுவன்
Updated on
1 min read

ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா - ஆப்கானிஸ்தான் தான் போட்டி டிராவில் முடிந்ததால்  இந்திய ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.

போட்டியின் இந்த முடிவில் இந்திய அணி வெற்றி பெறாமல் போனதை ஏற்றுக் கொள்ள முடியாமல் சிறுவன் ஒருவன் மைதானத்தில் அழுதுவிடுவான்.

அவ்வீடியோ கடந்த 24 மணி நேரமாக டிரெண்ட் ஆன நிலையில் அச்சிறுவனை போனில் தொடர்புக் கொண்டு இந்திய வீரர்கள் பேசியுள்ளனர்.

இந்திய வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் அந்த சிறுவனை தொடர்புக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் அந்தச் சிறுவன் புவனேஷ்வர் குமாரிடம் "புவி நீங்கள் கவலைப்படாதீர்கள்...நிச்சயம் நீங்கள் இறுதிப் போட்டியில் வெற்றி பெறுவீர்கள்” என்று கூறுகிறார்.

இந்திய வீரர்கள் மட்டுமல்லாது ஆப்கான் வீரர்களான ராஷித் கான்,  அந்தச் சிறுவனுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு அந்தச் சிறுவனை உற்சாகப்படுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in