நெட்டிசன் நோட்ஸ்: என்ஜிகே - அரசியல காப்பாத்துங்க டா

நெட்டிசன் நோட்ஸ்: என்ஜிகே - அரசியல காப்பாத்துங்க டா
Updated on
2 min read

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர் நடிப்பில் என்ஜிகே படம் வெளியாகி உள்ளது. இப்படம் குறித்து ரசிகர்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள்.

 அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Raj

செல்வாராகவன் சார்  இனி பெரிய ஹுரோவ வச்சி இயக்குறத இந்த என்ஜிகே படத்தோட நிறுத்திக்கலாம்.

கவிஞன் மோக்கியா

‏தொடர்ந்து மொக்க படங்களா நடிக்கிறதுக்கு பதிலா பேசாம நந்தகோபாலன்குமரன் நேசமணி ட்ட அப்பரன்டீஸ் ஸாவே வேலை பார்த்துட்டு இருந்து இருக்கலாம்

(◔‸◔)

உங்களோட படம் எல்லாம் மக்கள் புரிஞ்சி பாராட்ட 10 வருசம் ஆகுமாமே அது ஏன் சார்

அது என்னோட தப்பு இல்லை ஆடியன்ஸ் ஓட தப்பு

ρσσяηα gυнαη

ஒரு சூர்யா ரசிகனா ரொம்ப நாளைக்கு அப்புறம் நான் சூர்யாவ ரொம்பவே ரசிச்சேன் அதுவும் ரொம்ப நேரம்! ❤️

ojeash amir

#NGK ஒரு படித்த இளைஞன் நாட்டின் நலன் கருதி அரசியலில் இறங்கி அதிலிருக்கும் தடைகளை தாண்டி தன் இலக்கை அடையும் வரை அவன் படும் இன்னல்கள்,நெருக்கடிகளை அழகாக எதார்த்தமாக காட்டுகிறார் இயக்குனர்

தேவா SFC™

செல்வா படம்லாம் குடும்பமா போய் பாக்கமுடியாதுன்னாய்ங்க..

சரி குடும்பமா பாக்குறமாதிரி எடுத்தா இது செல்வா படம் இல்லன்றாய்ங்க..

Jeeva

நம்ம தமிழ் சினிமா டைரக்டர்ஸ் கிட்ட இருந்து இந்த அரசியல காப்பாத்துங்க டா

Contractor நவீன ராட்சசன்

மொக்க படம்.. எதிர்பார்த்த அனைவரையும் ஏமாற்றிவிட்டனர்.

mani raja

நம்பி வாங்க.....

ஏமாந்து போங்க....

chandran

சூர்யாவின் அற்புதமான

உழைப்பு.

செல்வராகவன் என்பவரின் உழைப்பும்

அப்சர்வேசன் & சீன் டீடெய்லிங்

புரிந்து கொள்ள இன்னும் 5 வருடம்

ஆகும் .

அதன் பின் கொண்டாடுவார்கள்.

Contractor Suresh Ponraj

பாதி படத்த செல்வராகவன் எடுத்துட்டு மீதி படத்த அசிஸ்டென்ட் பயலுகள கூப்பிட்டு படம் எடுத்து பழகிகோங்கடானு சொல்லிருப்பாரு போல?

Sathish Kumar

நல்லது செய்யணும்ங்கிற அரசியல் ஆசையாக மாறி அரசியல் வெறியாக மாறி நாட்டுமேல பைத்தியமாக இருந்தவனை பதவிமேல பைத்தியம் புடிக்கவைச்சு எந்த நிலைக்கு வேண்டுமானாலும் அழைத்துசெல்லும் என்னும் கருத்தையே தன் பாணியில் சூர்யா எனும் கலைஞனை வைத்து  செதுக்கியுள்ளார் @selvaraghavan அவர்கள்!

என்றும் சூர்யா வெறியனாக

என் முகத்த கடைசியா பாத்துக்கோங்க னு குமரன் சொல்றது

கிளைமாக்ஸ்ல குமரன் சைக்கிள்ள போறது

கீதா வ , வசந்தி காப்பாத்துறது. கீதாவும் சாகட்டும் னு குமரன் நினைக்கிறது

காப்றேட் கம்பனி கூட மீட்டிங் அரேஞ் பண்ண சூர்யா கேக்குறது

சிகப்பு ( கெட்டது ) , பச்சை ( நல்லது ) லைட்னிங்

கப்பல் வியாபாரி

சூர்யா நடிப்பு மட்டும்   .. வேற எதுவும் சொல்றதுக்கில்ல

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in