Published : 06 Mar 2018 16:36 pm

Updated : 06 Mar 2018 16:36 pm

 

Published : 06 Mar 2018 04:36 PM
Last Updated : 06 Mar 2018 04:36 PM

நெட்டிசன் நோட்ஸ்: பெரியார் சிலை குறித்து ஹெச்.ராஜா - நாங்க திரிபுரா இல்ல...தமிழ்நாடு

இன்று திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல் தமிழகத்தில் நாளை பெரியார் சிலை அகற்றப்படும் என்று ஹெச்ராஜா முகநூலில் பதிவிட்ட பதிவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து அதனை நீக்கினார். இதுகுறித்து நெட்டிசன்கள் அவர்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

புரட்சியாளர்

‏தந்தை பெரியார் அன்றே சொன்னார்

"மதம் மனிதனை மிருகமாக்கும்"

என்று.#HRaja

அஆ

‏வெற்றி ஆணவத்தில் என்ன வேணாலும் சொல்லிடலாம் னு இனி பாஜாக ல ஒருத்தனும் நினைக்க கூடாது. எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும். இனி உளறலுக்கெல்லாம் இடம் கொடுக்க கூடாது.

சாந்தகுமார்

‏பாஜக ல அடிக்கடி இப்படி யாராவது பேசுவதும்,அது அவர் தனிப்பட்ட கருத்துனு இன்னோர்த்தர் சொல்றதும் போதும்.சரியான கட்சியா இருந்தா ,இதுமாதிரியான பதிவுக்கு அவர்மேல் கட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும்..

Nadukal

‏ஷர்மாவ இன்னக்கி சவர்மா ஆக்கப்போராணுக  

 

karikalan

சிலை தரும் பயத்தை...... நீ உணர்ந்துள்ளாய்.....

அதன் வழி தரும் அடியை நீ

விரைவில் பெறுவாய்..... #HRaja #Lenin #LeninStatue #Periyar

Aravindhan

‏#HRaja வின் கருத்துக்கும் பிஜேபிகும் எந்த சம்பந்தமும் இல்லை !!!

- Dr. தமிழிசை

சுப்ரமணியசுவாமி கருத்துக்கும் பிஜேபி கும் எந்த சம்பந்தமும் இல்லை !!!

- Dr. தமிழிசை

இன்னும் கொஞ்ச நாள்ல பிஜேபி கும் எனக்கும் சம்பந்தமும் இல்லை என்றும் சொல்லுவார்கள் !!!

 

 

MANO

‏அந்த பயம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு !!!! இது வடமாநிலம் இல்ல !!!தமிழ்நாடு பேசும்போது ஒன்னுக்கு பத்துமுறை யோசிச்சி பேசு !!!!

Praveen Kumar

‏பெரியார் to H.Raja:

போய் நோட்டவ தொட்டுட்டு வந்து என்ன தொடு.

சூணா பாணா

‏#கஸ்தூரி மேல் வழக்கு போட தெரிந்தவர்களுக்கு @HRajaBJP மேல் வழக்கு போட பயம்மா?

மெத்த வீட்டான்

‏பெரியார் சிலையை உடைக்கணும்னு எழுதியதை பயந்து போய் அகற்றி மற்ற மாநிலங்களில் தமிழ்நாட்டின் பவரை அதிகரிக்க செய்த H.ராஜாவுக்கு நன்றி

Thalapathi Kani Vfc

‏வேங்கை மவன் ஒத்தைல நிக்கேன்..

தில்லிருந்தா வாங்கலே #பெரியார்

 

 

preethi 

‏இப்படியே போனா தாமரை நல்லா மலரும்..

kamal kannan

‏#HRaja உங்கள் செயல் தமிழகத்தில் தினமும் பாஜக வாக்குகளை குறைத்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் மகிழ்ச்சி‏

ஆஹான்!!  

‏பெரியார் சிலை உடைக்கப்படும் என்று தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்ததை நீக்கினார் #HRaja

எங்க மாஸ்டர் எப்பவுமே அப்டிதான்......

Gulla Boys

‏...நாங்க ஒன்னும் திரிபுரா இல்ல...தமிழ்நாடு ...

போஸ்ட்ட நீக்குனா மட்டும் விட்டுருவோமா

manivel annadurai

‏சொந்தக் கட்சியில் சிலை வைக்க தலைவர் இல்லாமல் மாற்று தலைவர்களை களவாடி புகழ்ந்து தள்ளும் கூட்டதானே.. ஒட்டுமொத்த தமிழகத்தில் பெரியார் சிலை மட்டும் அல்ல,எங்கள் தலைவர்கள் சிலைகளில் ஒன்றை கூட அசைத்துப்பார்க்கமுடியாது உங்களால்.

Vivek Kumaran

‏பெரியார் சிலை தெருவில் இல்லை ஒவ்வொருவரின் வீட்டில் உள்ளது... #HRaja

Bala

‏சிலைகளை உடைப்பதால் சித்தாந்தங்களை உடைக்கமுடியுமா என்ன??

Naveenk

‏இவரு இருக்க வரைக்கும் தமிழ்நாட்ல தாமரை பொம்மை கூட மலராது

 

 

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author