Last Updated : 26 Sep, 2014 03:44 PM

 

Published : 26 Sep 2014 03:44 PM
Last Updated : 26 Sep 2014 03:44 PM

ஈஸ்வர சந்திர வித்யாசாகர் 10

நவீன இந்தியாவில் சீர்திருத்தத்தை முன்னெடுத்த மகத்தான தலைவர்களில் ஒருவர் ஈஸ்வர் சந்திர வித்யாசாகர். மேற்கு வங்கத்தின் பர்சிங்கா கிராமத்தில் பிறந்தவர். அவரது பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...

* வறுமையில் வளர்ந்தவர். தந்தை கொல்கத்தாவுக்கு இடம்பெயர்ந்தபோது அங்கு ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றார்.

* 1839-ம் ஆண்டு சட்டத் தேர்வில் வெற்றி பெற்றார். இலக்கியம், வேதாந்தம், ஸ்மிருதி, நியாய சாஸ்திரம், வானவியல் ஆகியவற்றில் புலமை பெற்றார்.

* கொண்ட கொள்கைக்காக கல்லூரி பண்டிதர் பணியை ஒருமுறை ராஜினாமா செய்தார் வித்யாசாகர். ‘‘சாப்பாட்டுக்கு என்ன செய்வீர்கள்?’’ என்று கேட்டார்கள். ‘‘தெருத்தெருவாக காய்கறி விற்பேன். கொள்கையை விட்டுக்கொடுக்கமாட்டேன்’’ என்றார் உறுதியுடன்.

* வங்க மொழியில் அற்புதமான இலக்கண நூல்களை எழுதினார். வங்க எழுத்துகளை மாற்றியமைத்து சீர்திருத்தம் செய்தார். உரைநடையில் புரட்சியை ஏற்படுத்தின இவரது எழுத்துக்கள்.

* கல்வித் துறையில் கண்காணிப்பாளர் வேலை கிடைத்தபோது 35 மகளிர் பள்ளிகளைத் திறந்தார்.

* சமஸ்கிருதக் கல்லூரியின் கதவுகளை அனைத்து சாதி மாணவர்களுக்கும் திறந்துவிட்டார். எதிர்ப்புகளை மீறி, ஒடுக்கப்பட்ட மக்களோடு அமர்ந்து உணவருந்தினார். ஆதரவற்றவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்வதை கடமையாகக் கருதினார்.

* கணவரை இழந்தோருக்கான மறுமணச் சட்டத்தைக் கொண்டுவந்தது ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் வரலாற்றுச் சாதனை. மூட நம்பிக்கைகள் அதிகம் கொண்ட அந்த காலத்தில் இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக வேதங்கள், சமஸ்கிருதப் பாடல்களில் உள்ள மறுமண ஆதரவுக் கருத்துகளை மேற்கோள் காட்டினார்.

lகணவரை இழந்தோர் மறுமணச் சட்டத்துக்காக 987 பேரிடம் கையெழுத்து பெற்று அரசிடம் சமர்ப்பித்தார். 1856, ஜூலை 26-ல் மறுமணத்தை அங்கீகரிக்கும் அந்த மகத்தான சட்டம் அமலுக்கு வந்தது. அப்போது மறுமணம் செய்துகொண்ட பலரும் தங்கள் சேலையில் இவரது பெயரை நெய்துகொண்டனர்.

* குழந்தைத் திருமணத்துக்கு எதிராகவும் போராடினார். அதன் விளைவாக பெண்களின் திருமண வயது 10 ஆகவும், ஆண்களின் திருமண வயது 14 ஆகவும் மாற்றப்பட்டது.

* தனது மரணத்துக்குப் பிறகு யாருக்கு என்னென்ன உதவிகள் செய்யவேண்டும் என்று உயில் எழுதி, தனி யாக ஒரு பெரும் தொகையையும் ஒதுக்கியிருந்தார். வருங்

காலத்தில் யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் அதில் இருந்து ஒதுக்கச்சொன்ன கருணைக் கடல் அவர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x