சிப்கோ இயக்கத்தை டூடுல் வெளியிட்டு கவுரவித்த கூகுள்

சிப்கோ இயக்கத்தை டூடுல் வெளியிட்டு கவுரவித்த கூகுள்
Updated on
1 min read

 சிப்கோ இயக்கம் தோன்றி 45 வது ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுக் கூறும் வகையில் கூகுள் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

சிப்கோ இயக்கம் இந்தியச் சுற்றுச்சூழல் போராட்டத்தின் தொடக்கமாக அறியப்படுகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை இந்தியாவில் மிகப் பெரிய அளவில் உணர்த்திய, விழிப்புணர்வை ஏற்படுத்திய போராட்டமாக அது அமைந்தது.

காடுகளைப் பாதுகாக்கவும் வேண்டும் என்பதை வலியுறுத்திப் போராடிய தனித்தன்மை கொண்ட, பெண்களை மைய மாகக் கொண்டு அறியப்பட்ட சுற்றுச் சூழல் இயக்கம்தான் சிப்கோ இயக்கம். சிப்கோ இயக்கம் 18 நூற்றாண்டிலேயே ராஜஸ்தானில் தொடக்கப்பட்டன. பிஷ்ஷோன்ய் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் அரசு தேவைக்காக ஜோத்பூர் மகாராஜாவால் ஆணைக்கு ஏற்ப வெட்டப்பட விருந்த மரங்களை கட்டியணைந்து எதிர்ப்பை வெளிப்படுத்துதினர். மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து தனது முடிவிலிருந்து ராஜா பின்வாங்கினார்.

சுதந்திர இந்தியாவின் முதல், சிப்கோ இயக்கம் உத்தரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள மண்டால் கிராமத்தில் தொடக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த இயக்கம் ஹரியாணாவுக்கு பரவியது.

வெற்றிகரமான சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சிப்கோ மக்கள் இயக்கத்தைக் கட்டமைத்ததற்காக ராமன் மகசேசே விருது, பத்ம பூஷன் ஆகிய விருதுகளைச் சண்டி பிரசாத் ஏற்கெனவே பெற்றுள்ளார். தற்போது காந்தி அமைதி விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in