Published : 17 Sep 2014 12:26 PM
Last Updated : 17 Sep 2014 12:26 PM

அஸ்வின் ரவிச்சந்திரன் 10

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரனுக்கு இன்று பிறந்தநாள். அவரைப் பற்றி அரிய முத்துக்கள் பத்து...

# அப்பா ரவிச்சந்திரன் கிளப் கிரிக்கெட் ஆடியவர். அம்மா சித்ரா. மனைவி ப்ரீத்தி.

# தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பி.டெக். பட்டம் பெற்றுள்ளார் அஸ்வின் ரவிச்சந்திரன்.

# இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இவரது டி-சர்ட் எண் 99. டிவிட்டர் கணக்கு ஐ.டி ashwinravi99.

# பள்ளிக் காலங்களில் தொடக்க ஆட்டக்காரராக இருந்தார். பிறகு தன்னை சுழல் பந்து வீச்சாளராக மாற்றிக்கொண்டார்.

# சென்னையில் ஐ.பி.எல். போட்டிகள் நடக்கும்போது நேரம் கிடைத்தால், தெருவில் ‘கல்லி’ கிரிக்கெட் ஆடுவார்.

# அவரது பலம்.. பல்திறனான பந்துவீச்சுகள். இலங்கையின் அஜந்தா மெண்டிஸிடம் இருந்து கேரம் பால் பந்துவீச்சைக் கற்றுக்கொண்டார்.

# இந்திய கிரிக்கெட் அணியில் முதல் போட்டிக்குத் தேர்வானதும் சச்சின் கையால் அவருக்குத் தொப்பி தரப்பட்டது.

# விதவிதமான ஹேர் ஸ்டைல்கள் வைத்துக்கொள்வது, டென்னிஸ் ஆடுவது, காரில் தனியாக நீண்ட பயணம் போவது பிடிக்கும்.

# 2011-ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் சதத்தை அடித்தார்.

# அறிமுகமான டெஸ்ட் தொடரில் இரண்டு முறை ஆட்ட நாயகன் விருதுகள், அதிவேக ஐம்பது டெஸ்ட் விக்கெட்கள், நம்பர் ஒன் ஆல் ரவுண்டர் என்று பல சாதனைகள் கைவசம் உள்ளன!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x