Published : 18 May 2019 05:24 PM
Last Updated : 18 May 2019 05:24 PM

நெட்டிசன் நோட்ஸ்: மான்ஸ்டர் - குழந்தைகளைக் கவரக்கூடிய படம்

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி சங்கர், கருணாகரன் நடிப்பில் 'மான்ஸ்டர்' திரைப்படம் திரைக்கு வந்துள்ளது.

இந்தப் படம் குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Mani Yuvan Dravid

'மான்ஸ்டர்' போன்ற படங்களில் @iam_SJSuryah நடிப்பது நல்ல விஷயம் தான். ஆனால் 'வாலி', 'குஷி', 'நியூ' போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநரை தமிழ் சினிமா இழக்கிறது என்பதே உண்மை. ஆண்டுக்கு 10 படம் கூட நடிங்க. ஆனா வருஷத்துக்கு ஒரு படம் இயக்கி பிளாக்பஸ்டர் கொடுங்க சார்.

நோபிட்டா

மான்ஸ்டர்... இன்ட்ரஸ்டிங் ஸ்டோரி

வினோத்

நல்லாயிருக்கு.

மிகக்குறைவான கதாபாத்திரங்கள். எனினும் அதற்கு சரியான ஆட்களாக கேஸ்ட் பண்ணி, குழந்தைகளுக்கேற்ற மீட்டரைப் பிடித்து காமெடியாக எலிவேட்டை ஆடுகின்றனர். எஸ்ஜே சூர்யா, ஜஸ்டின் பிரபாகரன் கச்சிதம்.

ஹாலிவுட் எலியா, கொரியன் எலியா என்பதையெல்லாம் இனிதான் உட்கார்ந்து நோண்ட வேண்டும் 

Santhosh

எளிய வடிவில் ஓர் அழகிய மனிதம் பேசுகிறான் இந்த மான்ஸ்டர். 

⭐புரூஸ்லீ

90 கிட்ஸின் சுந்தரா ட்ராவல்ஸே 2K கிட்ஸின் மான்ஸ்டர் என்று நம்மில் எத்தினி பேருக்கு தெரியும். Sj சூர்யாவ விட வடிவேலு தான் கெத்து  

Rudhran

தமிழ்த் திரையுலகில் எப்போதாவதுதான் அத்தி பூத்தாற்போல் ஒரு நல்ல திரைப்படம் வரும்.

அப்படிப்பட்ட ஒரு திரைப்படம்தான் இந்த திரைப்படம்.

குடும்பத்துடன் திரையரங்கம் சென்று கண்டுகளியுங்கள்.

புதிய அனுபவத்திற்குத் தயாராகுங்கள்.

#Monster க்ளீன் ஹிட் ஆல் சென்டர்✌

Prabhu R Ponnuchamy

Brilliantly crafted one

மனிதநேயத்தை வள்ளலார் வழியா எலியை வெச்சு அழகா பதிவு பண்ணியிருக்கார். வாழ்த்துகள்.

Sathya Kumaran G

சிறந்த குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படம்... எலியை பிடிக்காதவனான என்னையும் பிடிக்கச் செய்துவிட்டது இந்தப் படத்தின் கிளைமாக்ஸ்

Akshay J

அழகான படம். ரொம்ப நாளைக்குப் பிறகு குழந்தைகளை கவரக்கூடிய படம்

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x