Published : 29 May 2019 05:34 PM
Last Updated : 29 May 2019 05:34 PM

இணையத்தில் வைரலான மாற்றுத்திறனாளி ஊழியருக்கு மின்சார வாகனத்தைப் பரிசாக அளித்த சொமேட்டோ - குவியும் பாராட்டு

நெட்டிசன்களின் பாராட்டுதலைப் பெற்ற தனது ஊழியர் ஒருவருக்கு மின்சாரத்தில் இயங்கும் மூன்று சக்கர வாகனத்தை ஆன்லைனில் உணவு விநியோகிக்கும் நிறுவனமான சொமேட்டோ வாங்கிக் கொடுத்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சொமேட்டோ நிறுவனத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஊழியர் ஒருவர் கைகளால் ஓட்டும் மூன்று சக்கர சைக்கிளில் உணவை வாடிக்கையாளருக்கு எடுத்துச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அந்த ஊழியரின் பணி ஆர்வத்தை நெட்டிசன்கள் பலரும் பாராட்டினர்.

இந்நிலையில் அந்த ஊழியருக்கு சொமேட்டோ நிறுவனம் மின்சாரத்தால் இயங்கும் மூன்று சக்கர வாகனத்தைப் பரிசாக அளித்துள்ளது.

இதனை  சொமேட்டோ நிறுவனத்தின் நிறுவனரான தீப் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், “எங்கள்  உணவு விநியோகிப்பாளர் ராமு சாஹூ மின்சார வாகனத்தை ஏற்றுக்கொண்டார். எங்களுடைய டெலிவரி உலகத்தில் அவரும் அங்கமாக இருப்பதை நினைத்து நாங்கள் நன்றி கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

சொமேட்டோவின் இந்தச் செயலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x