

விஜய் குமார் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் உறியடி 2 திரைப்படம் இந்த வாரம் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
ஜிம்பலக்கடி பம்பா
மிக தரமான படம்,சரியான நேரத்தில் கொடுத்தமைக்கு மிக்க பாராட்டு! #உறியடி2
mikekannanshajan
பொதுவா ஒரு படத்துல கதாநாயகன்னா பத்து பேர அடிக்கிற மாதிரியும் தன்னால எதுவும் முடியும்ங்கிற மாதிரி காட்டுவாங்க. அரசியல் சினிமால சொல்லவே தேவையில்ல. ஆனா உறியடி 2 ஒரு சகமனுஷனா வலியையும் வலிக்கான கோபத்தையும் எதார்த்தமா காட்டியிருக்கிற சகோ @Vijay_B_Kumar க்கு பாராட்டுகள்.
Ponnumani Gurusamy
நீங்க ஒட்டு யாருக்கு வேணாலும் போடுங்க. ஆனா போடுறதுக்கு முன்னாடி
'உறியடி 2' படத்த ஒரு தடவ பார்த்துட்டு போடுங்க.. நாம தேர்ந்தெடுக்கும் பிரதிநிதி எப்படிப்பட்டவரா இருக்கணும்னு நமக்கு புரியும்.
நமது வலியை உணராதவன், புரியாதவன் நமக்கு தலைவன் ஆக முடியாது.
பொல்லாதவன்™
#உறியடி 2 சூப்பர்
சில கார்ப்பரேட் கம்பெனிகளின் நச்சுத்தன்மை! முதலாளித்துவம்! அரசியல்! மற்றும் சாதி அரசியலைப் பற்றிய படம்!
படத்தில் #கம்யூனிஸம் பரவிக் கிடக்கும்..
Ammapet Karunakaran
உறியடி 2 ....
விழிப்புணர்வுப் படமே...
Ashok kumar
உறியடி 2 தரமான படம்
san
உண்மையாகவே இந்தத் திரைப்படத்தை எடுத்த உங்களை நினைத்துப் பார்த்தால் பெருமையாக உள்ளது அண்ணா.
ரொம்ப நாட்கள் கழித்து நல்ல ஒரு சமூகம் சார்ந்த திரைப்படத்தைக் கண்டதில் மிகவும் மகிழ்ச்சி அண்ணா.
vijay kumar
முந்தைய தலைமுறையின்
ஏமாற்றம்...!!
இன்றைய தலைமுறையின்
எழுச்சி...!!
அடுத்த தலைமுறைக்கு
எச்சரிக்கை....!!!