நெட்டிசன் நோட்ஸ்: சேலம் 8 வழிச்சாலை திட்ட அரசாணை ரத்து - விவசாயிகளின் வெற்றி

நெட்டிசன் நோட்ஸ்: சேலம் 8 வழிச்சாலை திட்ட அரசாணை ரத்து - விவசாயிகளின் வெற்றி
Updated on
1 min read

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், 8 வழிச்சாலை திட்ட அரசாணையையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன்  நோட்ஸில்

A. CHANDRASEKARAN THONDAIMAN

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு

மத்திய மாநில அரசுகளின் ஆணவப்போக்கிற்கு எதிராக எட்டு வழிச்சாலை திட்டம் அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்த து

Puthan Magan

8 வழி சாலை திட்டம் தொடர்பான அனைத்து அரசு ஆணைகளையும் ரத்து செய்து நீதிமன்றம் வெளியிட்டிருக்கும் உத்தரவு வரவேற்புக்கு உரியது நீதிமன்றத்தின் மீது சாமானியர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அவ்வப்போது உண்மை என்று தெரிய வரும் போது மனம் மகிழ்வு கொள்கிறது.

niranjan kumar

சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கு அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம்

இது திட்டத்தை தொடங்கிய தமிழக அரசுக்கு தோல்வியா?

இல்லை திட்டத்திற்கு எதிரா வழக்கு போட்ட பாமகவின் அன்புமணி ராமதாசுக்கு வெற்றியா?

சீரியஸ் டவுடட்

இராவணன்(RAVANAN)

சென்னை சேலம் 8 வழிச்சாலைக்கான அனைத்து அறிவிப்புகளையும் நீக்கி உயர்நீதிமன்றம் ஆணை

பாடுபட்ட தோழர்கள் அனைவருக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

Ma10kumar

நீங்கள் எளிதில் கடந்து போவதற்காக, நாங்கள் எங்கள் நிலங்களை இழந்து போவதா?

Venkat

எட்டுவழிச்சாலை - நிலம் கையகப்படுத்த தடை.

கொண்டாட எதுவுமில்லை.

நடைமுறைச்சிக்கல்கள். முறைப்படி க்ளியரன்ஸ் பெற்று சாலை அமைக்க திட்டமிட்டால் தடை செய்ய வழியில்லை.

ஆனால், திட்டம் போட்டவரும் வழக்கு போட்டவரும் ஒரே கூட்டணியில்.

ஹா ஹா ஹா

முனீப் அபூ இக்ராம்

52 mins ·  · எட்டு வழிச் சாலை எடப்பாடி தலையில் ஒரு குட்டு!

ரஞ்சனி கண்ணம்மா

 எட்டு வழிச் சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் அரசாணையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் -செய்தி மக்கள் போராட்டங்கள் ஒருபோதும் தோற்றதில்லை!!!

Nagendran Thangaraj

எட்டு வழிச் சாலை ரத்து . விவாசாயிகளின் மாபெரும் வெற்றி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in