

பெண்ணின் மார்பக பால் நாளங்கள் என்று குறிப்பிடப்படும் அனாடமி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தாயாகும் பெண்களின் மார்பக பால் நாளங்கள் உள்ளுக்குள் உடற்கூறியலில் எப்படி இருக்கும் என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில் பால் சுரப்பிகள் சின்னச் சின்ன பிரிவுகளாகவும் குறுகிய குழாய்கள் அல்லது நாளங்களாக இருக்கும். உற்பத்தியாகும் பால் அவை ஒவ்வொன்றில் இருந்தும் மார்புக் காம்புகளுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இதுதொடர்பான உடற்கூறியல் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் மலர்கள் போன்ற நாளங்கள் ஒன்றோடொன்று சேர்ந்து காம்பில் இணைந்திருக்கின்றன.
இந்தப் படம் ட்விட்டரில் வெளியான சில நாட்களில் 1.42 லட்சம் பேர் இதை லைக் செய்துள்ளனர். இதுவரை 47 ஆயிரம் பேர் கமெண்ட் செய்துள்ளனர்.
பெண்களுக்கான உடற்கூறியலில் புதிய பாதை என்று நெட்டிசன்கள் சிலாகித்து வருகின்றனர். எனினும் இது உடற்கூறியல் & உடலியல் (Anatomy & Physiology) என்னும் ஐபேடு செயலி மூலம் உருவாக்கப்பட்ட விளக்கப்படமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.