

தோனியின் பிரமாதமான பேட்டிங் மற்றும் கடைசி ஓவரில் பிராவோவின் சிறப்பான பந்துவீச்சால் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது.
சென்னை சூப்பர் கிங்ஸின் வெற்றி குறித்தும் தோனியின் ஆட்டம் குறித்தும் நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.
அவற்றில் சில:
சால்ட்&பெப்பர் தளபதி
கடைசி வரைக்கும் இவன் தோக்க மாட்டான்னு கோடிப் பேர்களை நம்ப வச்சவனை நீங்க எப்டி கூப்பிடுவீங்க?நாங்க தலைவன்னு கூப்பிடுவோம்
சென்னைல பொறந்த ஒவ்வொரு குழந்தைகிட்டயும் தலைவன் யாருன்னா தோனியத்தான் கை காட்டும்
CSKian
எல்லாரும் ரன் அடிக்கும்போது தானும் ஒரு 50ய போட்டுக்கறவன் இல்லடா தலைவன் யாருமே அடிக்காதப்ப தனி ஆளா நின்னு சம்பவம் பண்றான் பாரு அவன்தான் தலைவன்
புதுவை குடிமகன்
அடிபட்ட சிங்கத்தோட மூச்சு எப்டி இருக்கும்னு காமிச்சிட்டான் தலைவன்
CSK சிலுவை
ஐ.பி.எல்ல அனைத்து டீம்களுக்கும் எமன்டா
இந்த CSk வம்சத்தைச் சார்ந்த
மகேந்திர சிங்...
CSK Malar
தோனி இஸ் ய ஜீனியஸ்
ℳsᴅ பிளேடு
விளையாண்ட 3 மேட்ச்ல எதோ 2,1ன்னு ஜெய்க்க நாங்க ஒண்ணும் சாதாரண டீம் இல்லடா... நாங்க விளையாண்ட 3 மேட்ச்சும் வின்னு
Sharmi
தோனி கடைசியாக அடித்த மூன்று சிக்ஸ் வெற்றிக்கு முக்கியக் காரணம்
Ner Konda Paarvai Moses
ஜெயிச்சதுக்கு முக்கியக் காரணம் தலைவன் தோனி & ப்ராவோ
நல்லவன்|கெட்டவன்
தோனி மாதிரி டென்ஷன் ஆகாம கூலா சிச்சுவேஷன்ஸ ஹேண்டில் பண்ண கத்துக்கணும்...ஃபியூச்சர் இந்தியன் அணி கேப்டன்ஸ் #CSKvRR
CarlsBerg ™
சிஸ்கேல ஒரு பேட்ஸ்மேன் அடிக்கத் தவறினா ஒரு டீம் தலைவனா தோனி நின்னு விளையாடுறார். ஹேட்டர்ஸ்க்கு நம்ப டீம் தலைவன் இப்படி இருப்பானான்னு கடைசி வர பொலம்ப விடுறதுதான்டா தோனி ஸ்டைல்..
ரைட்டு விடு
உச்சகட்ட வெற்றியில் துள்ளிக் குதிப்பதும் கிடையாது. உச்சகட்ட தோல்வியில் மிகவும் சோர்ந்து போனதும் கிடையாது.
உணர்ச்சிகளை பேலன்ஸ் பன்றது லாம் சாதாரண விஷயம் இல்ல. ஏனெனில் சூழ்நிலையை நன்கு அறிந்தவன். அவன் மட்டுமே சூழ்நிலைக்கேற்ப மாற்ற முடியும். அவன் தான் தோனி
Hades
My dear தல :))))))))))
ஒரே டம்ளரில் 5 சுவை: ‘லேயர் டீ’யில் அசத்தும் மாணிக்கம்