Published : 29 Mar 2019 05:35 PM
Last Updated : 29 Mar 2019 05:35 PM

நெட்டிசன் நோட்ஸ்: சூப்பர் டீலக்ஸ் - படம் உங்களை ஆச்சர்யப்படுத்தும்

'ஆரண்ய காண்டம்' படத்தைத் தொடர்ந்து, தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் ஆகியோர் நடித்துள்ள 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் இன்று( வெள்ளிக்கிழமை) வெளியாகியுள்ளது. இப்படம் குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தைப் பதிவிட்டுள்ளனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

பாலமுருகன்

'சூப்பர் டீலக்ஸ்' படம் பார்த்தேன். தியாகராஜன் குமாரராஜா சார் தரமான சம்பவம் பண்ணிருக்கீங்க... சமந்தா, ரம்யா கிருஷ்ணன் நடிப்பு செம.. யுவன் வேற லெவல். அந்த 5 பசங்களும் பின்னிட்டாங்க !விஜய் சேதுபதி பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. ராசுக்குட்டி அஸ்வந்த் சூப்பர்.

shalini

நியாயம் வேற நடைமுறை வேற... உன் சரி எவனுக்கோ தப்பா இருக்கலாம். அவன் சரி உனக்குத் தப்பா இருக்கலாம். மொத்தத்துல இங்கே சரி , தப்பு அப்படின்னு எதுவுமே இல்லை .. இதான் 'சூப்பர் டீலக்ஸ்'.

ஒரு சிலரால இந்த ரா கான்செப்ட்டை ஜீரணிக்க முடியாது. ஆனால் யதார்த்தம் இதுதான்...

Madasamy Manoj

#சூப்பர்டீலக்ஸ் #SuperDeluxe  நீங்க எந்த mindset ல போனாலும் படம் உங்களை ஆச்சர்யப்படுத்தும்.. ஒரு சீன் பார்த்து, ச்சை படமா இது னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள ஆகா படம்னா இது தான் படம் னு சொல்ல வைக்கிற மாதிரி திரைக்கதை..

மீனம்மா

'சூப்பர் டீலக்ஸ்' படத்தை மொக்கைன்னோ நல்லா இல்லைன்னோ யார்னா சொன்னா.. அவங்களோட சினிமா அறிவு பூஜ்ஜியம்னு முடிவு செஞ்சுடுங்க.. இந்தப்படம் வயது வந்த சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கானது..

The Super Deluxe AK™

#Equality அப்டிங்கிறதையும் பொதுpபுத்தி அப்டிங்கிறதையும் பத்திப் பேசற படம்..ஆனா அது மொத்தமும் கடைசி 15 மினிட்ஸ் தான்..அத அழுத்தமா பதிவு செய்ய சில பேக் ஸ்டோரீஸ் தேவை..அதுக்கு மீதி 2:45 மணி நேரம்..   Another Cult From TRKR

Vinodh Jayaraman

பகவதி பெருமாள் ஏற்று நடித்து இருக்கும் வேடம் அதன் கதாபாத்திரத்தின் ஆழம் நம்மை கோவமூட்டி எரிச்சல் ஆக்கி ரசிக்கவும் வைக்கும். அதுதான் மிகப் பெரிய பலம்.

தொக்கு ட்வீட்ஸ்

வாழ்க்கையைக் கொண்டாடிட்டே இருக்க இப்படி அடிக்கடி படம் எடுங்க ...

CSK/RR Chowkidar

The Frame has to tell a Story னு யாரோ சொல்லி கேட்டிருக்கேன். ஆனா அது செல்வா & குமாரராஜா படத்துல மட்டுமே பார்க்க முடியுது :))

kathir suriya

தமிழ் சினிமாவுக்கு வேறு வடிவம்...

பல வருஷம் கழிச்சும் பேசப்படப்போற படம்

#SuperDeluxe

செம துணிச்சல் வேணும்

யோசிக்கவும்

நடிக்கவும்

barath

#SuperDeluxe எல்லாருடைய நடிப்பும் அருமை.  இருந்தாலும் பஹத் பாசில், பக்ஸ் standout performance. எந்த கேரக்ட்டர் கொடுத்தாலும் விசே தான் தெரிவார், ஆனால் ஷில்பா கேரக்டரில் கொஞ்சமும் விசே இல்லை  

Francies Raj

படம் நல்லா இருக்கு. ஆனா 'ஆரண்ய காண்டம்' அளவுக்கு இல்ல.

#SuperDeluxe

~

இன்னொரு நல்ல தரமான சம்பவம். ஆரண்ய காண்டத்தின் கதைமாந்தர்களிடம் இயல்பான மிருக சுபாவங்களைத் தாண்டி நுணுக்கமான உளச்சிக்கல்கள் ஏதும் அவ்வளவாய் காணப்படாது; அந்தப் படத்திற்கு அது தேவையும் படவில்லை.

CSK Barath

படம் ரொம்ப லென்த்தா போற மாதிரி இருக்கும் ஆனா வொர்த் டூ வாட்ச்..

டயலாக்ஸ், ஆக்டிங்,பிஜிஎம்னு எல்லாம் வேற லெவல்..

Dhanush Gokul

வழக்கமா எல்லாரும் பாக்குற சினிமாவ அவன் வேற ஒரு கோணத்துல இருந்து பார்த்தான்.. விஜய் சேதுபதி  

Jayaprakash Sampath

‏#slowBurn  வகையறா...நடுவுல கொஞ்சம்  பொறுமையைச் சோதிக்கும். பல்லக் கடிச்சுக்கிட்டுக் கடந்துட்டம்னா.. பிரமாதமான அனுபவம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x