Published : 12 Mar 2019 01:04 PM
Last Updated : 12 Mar 2019 01:04 PM

நெட்டிசன் நோட்ஸ்: பொள்ளாச்சி பாலியல் பயங்கரம் -தண்டனைகள் கடுமையாக வேண்டும்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்களை சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி, பாலியல் தொந்தரவு கொடுத்து, அதை வீடியோவாக எடுத்து மிரட்டியதாக, திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றில் சில பதிவுகள்

மழலை

ஆண் பிள்ளையோ, பெண் பிள்ளையோ ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டிய கட்டாயக் கடமை பெற்றோர்களை, இந்த சமூகத்தைச் சார்ந்தது.

Dharmaraj

பொள்ளாச்சி சம்பவம் போன்று இனி இது நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டு. அரசு தன் கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும்.

R.Prabakaran

‏பொள்ளாச்சி சம்பவம் நிறைய அரசியல்வாதிகளின் குடும்பங்கள் முறையற்ற பண வசதியுடன் உழைப்பு  ஏதும் இல்லாமல் சொகுசு வாழ்க்கை வாழ்வதையே காட்டுகின்றது.

Sivaraman PK

‏நிர்மலாதேவி வழக்கில் இருந்து பொள்ளாச்சி சம்பவம் வரை அதிகாரவர்க்கத் துணையோடு அரங்கேறியுள்ள சம்பவங்கள்!!!

Dinesh Saravanan

‏தேர்தலைத் தாண்டி நாம் அனைவராலும் பேசப்பட வேண்டிய ஒன்று பொள்ளாச்சி பாலியல் வன்மம். எங்கோ ஒரு மூலையில் நடந்தாலே கண் கலங்கும் நாம், நம் பெண்களுக்கு இப்படியா என்றதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை

முழு நேர விவாதப் பொருளாக மாற்றுங்கள்,செய்திகளை ஆராய்ந்து பரப்புங்கள்.

லக்‌ஷ்மன சாமி

பொள்ளாச்சி, உடுமலை வட்டாரப் பகுதிகளில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்களின் வழக்குகளைத் தூசிதட்டினால் இன்னும் விரிந்த தொடர்புகள் சிக்கக் கூடும்.

P Kathir Velu

பொள்ளாச்சி பாலியல் வக்கிரத்தில் குற்றம் சாட்டப்பட்ட திருநாவுக்கரசுவின் குடும்பப் படங்கள் வெளியானபோது, அதெப்படி அவன் குற்றத்திற்கு குடும்பப் படம் எனும் குரல் வந்தது நியாயம்தான். ஆனால் அவனுக்கு இன்று 'அவனுடைய அம்மாவே ஜாமீன் கோரி', அந்த மனு தள்ளுபடியாகியிருக்கிறது எனும் செய்தி பெரும் அதிர்ச்சி தருகிறது.

ஒருபக்கம் 'இந்தப் பெண்கள் ஏன் போனார்கள்!?' எனும் அறிவார்ந்த(!) பதிவுகளுக்கு நிகராக 'ஆண்கள் எல்லாருமே மோசமான பயலுக டோழி!' எனும் வகைப்பதிவுகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

இன்னொரு பக்கம் ஈரோடு, பெருந்துறை ஊர்கள் உள்ளிட்ட(!) கொங்கு மண்டலத்தில் சட்டம் ஒழுங்கு காவல் துறையெல்லாம் பழைய தெலுங்குப் படங்களுக்கு நிகரென்றும், கூடவே பெண் எடுக்காதே, மாப்பிள்ளையே போகாதே என்றும் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

எப்படியாகினும்...

எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம் என நினைக்கிறார்கள். உண்மையில் அது லாபம் அல்ல பாவம்!

Shinchan selva

கொஞ்சம் ஆழமா யோசிச்சா, 90% இந்த மாதிரி குற்றங்கள பணக்கார வீட்டுப் பையன் தான் பண்றான். காரணம், அவங்களுக்கு மேலும் மேலும் பணம் சேர்க்கவே நேரம் போதல, பிள்ளைங்களை எப்படி கண்காணிப்பது?. உங்க குழந்தைகளை ஒழுக்கமா வளருங்கள். கண்காணியுங்கள்.

Hades

Sex is a taboo ன்னு சொல்ற Society and பொண்ணுங்கள தெய்வமா மதிக்கணும் ன்னு சொல்றவணுங்க தான் dangerous.

தெய்வமாலாம் பார்க்கத் தேவையில்லை..அவ சம்மதம் இல்லாம தொடக்கூடாது ன்னு சொல்லி வளர்த்தாலே போதும்.

ஆண் பிள்ளைகளுக்கு அதைச் சொல்லி வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை. Need of the hour.

music

பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தீர்வு கிடைக்க வேண்டும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க வேண்டும் என்பதிலேயே ஒற்றுமையின்றி, கட்சிகளுக்கும், சாதிகளுக்கும் முட்டுக்கொடுத்தல்களும், பெண்களின் ஒழுக்கம் பற்றிய கற்பித்தல்களும், நீ ஒழுங்கா, நான் ஒழுங்கா என்ற கேள்விகளும்!

உடனடி தேவை தண்டனை.

®

நிர்மலாதேவி வழக்கில் இருந்து பொள்ளாச்சி சம்பவம் வரை அதிகார வர்க்கத் துணையோடு அரங்கேறியுள்ள சம்பவங்கள்!!!

மெத்த வீட்டான்

'தெறி' படத்துல விஜய் கொடுக்கும் தண்டனை அந்த மனித மிருகங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்..விஜய் போன்ற  நடிகர்கள் இதற்கு குரல் கொடுக்க வேண்டும்..அப்போதுதான் இந்தக் கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வரும் !

ⓛⓨⓕ2ⓛⓥⓔ

இருப்பதிலேயே தரங்கெட்ட விஷயம் ஒரு பொண்ணோட நம்பிக்கையில விளையாடுறதுதான்.

இணையத்தில் இருக்கும் எல்லோரும் இதற்கு குரல் கொடுத்தே ஆகணும. இல்லைனா இங்கு இருப்பதற்கு அர்த்தமே இல்ல.

Vivek Nijanthan

பெண்களுக்கு பெண்மையைச் சொல்லிக் கொடுத்த இச்சமூகம் ஆண்களுக்கு ஆண்மையைச் சொல்லிக் கொடுக்கத் தவறிவிட்டதே!

Anish kutty

தண்டனைகள் கடுமையாக இருக்கவேண்டும்.

GOKULRAJ KALIMUTHU

"மனித ரூபத்தில் இருக்கும் இந்த மிருங்களிடத்தில் கருணையும், ஆதரவும் காட்டக்கூடாது"

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x