

நயன்தாரா, யோகி பாபு நடிப்பில் நடிப்பில் சர்ஜுன் இயக்கத்தில் ஐரா படம் இன்று வெளியாகி உள்ளது. இந்தப் படம் குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டிருக்கிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
Kayal Devaraj
இவர்தான் நயன்தாரா என்று சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்? பவானியைப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.
இசை, இயக்கம், நயன்தாரா, யோகி பாபு, கலையரசன் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. #ஐரா
santhosh sachu
#ஐரா பவானியாக வாழ்ந்து இருக்கிறீர்கள் உங்கள் நடிப்பு வேறமாதிரி இருக்கிறது
#வாழ்த்துக்கள் சகோதரி
பிரகாஷ்
நயன்தாராக்காக பார்க்கலாம். ஹாரர் எலிமெண்ட்ஸ்காக பார்க்கலாம், பட்டர்பிளை எபெக்ட கனெக்ட் பண்ண விதத்துக்காக பார்க்கலாம்னு தூக்கிட்டு வருவாங்க. நம்பிடாதீங்க மக்களே !
MSK
#Airaa - சுமாரா தான் இருக்கு..
KA.RAJIVGANDHI
படத்தின் ஆறுதலே நயன் தாராவின் நடிப்பு தான். மாடர்னான யமுனா, வெள்ளந்தி பவானி என இரண்டு வேடங்களிலும் வித்தியாசம் காட்டி படத்தை தாங்குகிறார்
K N A
பழிக்கு பழி வாங்குறதுக்குனா மரியாதை போச்சு டா உங்களால
Mahesh
#ஐரா சொல்லுறதுக்கு ஒண்ணுமே இல்லை...
#நயன்தாரா #யோகிபாபு நடித்தால் மட்டுமே படம் ஓடும் என்று நினைத்தால் வேஸ்ட்...
ஒரே ஒரு பாட்டும் அருமை.