Published : 01 Feb 2019 04:55 PM
Last Updated : 01 Feb 2019 04:55 PM

நெட்டிசன் நோட்ஸ்: பட்ஜெட் 2019 -  தேர்தல் அறிக்கை

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது கடைசி மற்றும் இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. இடைக்கால நிதி அமைச்சர் பியூஷ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்..

vimal

4 வருடங்களில் சிறிது சிறிதாக உயர்த்தாமல் கடைசி நிதிநிலை அறிக்கையில் உயர்த்தியிருப்பது அப்பட்டமான ஓட்டரசியலன்றி வேறொன்றுமில்லை

 

yuvraj

2019 பட்ஜெட்

மீண்டும் பாஜக

நாட்டை ஆள துடிக்கிறது

என்பதை காட்டுகிறது.

 உஷார்ர்ர்ர்ர்....

 

மாயவரத்தான் கி. ரமேஷ்குமார்

 

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்..

 

'5 லட்சம்’ வாலா பட்டாசு.

 

அஜ்மல் அரசை

 

அநேகமாக மோடிக்கான கடைசி பட்ஜெட் இதுவாகத்தான் இருக்கும்.

 

பர்வீன் யூனுஸ்

 

 

தேர்தல் அறிக்கையை பாராளுமன்றத்துல வெளியிட்ட ஒரே கட்சி பாஜகவா தான் இருக்கும் # இடைக்கால பட்ஜெட்.

 

திரு

அடுத்த ஆண்டு திருக்குறளோட ஆரம்பிக்கணும் பட்ஜெட்... செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா...

 

 

Sahul Ks

 

பசி பட்டிணியென்று வாழும்நிலையில் உதவாத சொந்தம் இன்றோ நாளையோ என இழுத்து கொண்டிருக்கும் நிலையில் பால் ஊத்த வருமே அதை போன்றது பாஜக அரசின் கடைசி பட்ஜெட்...

 

2.0

 

பட்ஜெட் 2019 சிறப்பு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x