

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், நவாசுதீன் சித்திக் ஆகியோர் நடிப்பில் பேட்டை திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள்.
கானா பிரபா
ஆகா இப்பிடி ஒரு ரஜினியைப் பார்த்து எத்தனை வருடங்களாச்சு என்று ஆச்சரியமும், குதூகலமும் தலை தூக்குகிறது.
மன்னன், அண்ணாமலை காலத்து ரஜினியைக் கொண்டாடி அப்படியே கொண்டு வந்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்
சூப்பர் ஸ்டாரின் அதே இளமைத் துள்ளல், காந்தக் குரல்
ரஜினி உக்காந்தா மாஸ் எந்திரிச்சா மாஸ் நடந்தா மாஸ் ஓட்னா மாஸ்ன்னு ஒரு படம்..
Mahe Manoj
பேட்ட படத்துல 90% ரஜினிய பாத்தோம்....
அதுக்கு நீங்க முத்து எஜமான் தளபதி பழைய படத்த பாத்தாலே 90% ரஜினிய பாத்திருக்களாமே டா..
-சிவா--
சிவாஜி க்கு அடுத்து ரிப்பீட்டட் ஆடியன்ஸ் பேட்ட படத்துக்கு வருவாங்க என்பது என் கணிப்பு..
Karthikeyan M.K
பேட்ட விமர்சனம்:
இது திரையுலக
இராஜராஜ சோழனின் படையெடுப்பு.
விஸ்வாச பேட்ட சேட்டு
பேட்ட !
ரொம்ப நீளம் ஒரு ப்ரச்சனை !சொல்ல வர விஷயத்தை கன்வே பண்ணாம விட்ட மாரி ஒரு பீல் ! ஆணவக்கொலை ,மண்ணு பரச்சனைன்னு பேச எவ்வளவோ விஷயம் இருக்கு !க்ளைமேக்ஸ் ட்விஸ்ட் நல்லாயிருந்தாலும் விசே நல்லவன் தான்னு ஒரு பீல் !என்ன இருந்தாலும் தலைவர் படம்
Rᴀɢᴀᴠɪ
அப்பா பேட்ட போய்ட்டு வந்துட்டாரு அவரு ஆட்டம் தாங்கல எல்லாருக்கும் ஸ்வீட் வாங்கி குடுத்துட்டு இருக்காரு ரஜினிக்கு இளமை திரும்பிச்சோ இல்லையோ எங்கப்பாக்கு திரும்பிச்சி போல அலப்பறை தாங்கல கதை கேட்டா கூட சொல்ல மாட்றாரு தியேட்டர் ல பாக்கலாம் வெயிட் னு சொல்றாரு..
Maathevan
மாயாவிக்கு இளமை திரும்பும்போது மயங்காமல் இருக்க முடியுமா?
ரஜினிகாந்த் என்றென்றும் மனம் மயக்கும் மாயாவி!
Manikandan
ஒன்றரை மாத இடைவெளியில் 2 மெகா
பிளாக்பஸ்டர்களை அசால்டாக 68 வயதில் தந்த முதல் கதாநாயகன் 'ரஜினிகாந்த்' என்று தமிழ் சினிமா வரலாறு எழுதப்படும் ..
சேரா
2004 ல
சந்திரமுகி - சச்சின்
விஜய் புரிஞ்சுகிட்டார்
2019 ல
பேட்ட - விஸ்வாசம்
அஜித்தும் புரிஞ்சுகிட்டார்
திராவிடன்
ரொம்ப காலம் கழிச்சி ஒரு படம் பார்த்து உடம்பெல்லாம் சிலிர்க்குது.... #பேட்ட
Thanush
பேட்ட
தலைவர் வெறித்தனம்
Indrajith Bandara
"திரும்ப வந்துட்டேன்னு சொல்லு 25 வருஷதுக்கு முன்ன எப்டி போனேனோ அப்டியே திரும்ப வந்துட்டேனு சொல்லு."
இது கபாலி கான டயலாக் இல்ல #பேட்ட தலைவருக்கான பொருத்தமான டயலாக்...