Published : 18 Dec 2018 03:23 PM
Last Updated : 18 Dec 2018 03:23 PM

நெட்டிசன் நோட்ஸ்: பெர்த் டெஸ்ட் - வெற்றிகரமான தோல்வி

பெர்த்தில் இந்தியா  - ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 146 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின்  தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

பீட்டர் மாமா

இந்திய அணியால் மட்டுமே சாத்தியம்

AUS 192/6 to 243

IND 137/6 to 140

@SuDLX

பரவால்ல ஆஸிஸ்… ஜெயிச்சு லெவல் பண்ணியும்  பெருசா ஒண்ணும் ஆடல கிரவுண்டுல… கோலி பண்ணுன கூத்துக்கெல்லாம் கடுப்பேத்துறாப்ல எதாச்சும் பண்ணுவாங்கன்னு எதிர்பாத்தேன் :-/

 

சிலுக்குவார்பட்டி சேட்டு

நம்ம டீமுக்கு தேவை ஜடேஜா மாரி 3 ஆல்ரவுண்டர். ஹர்திக் பாண்டியா வந்துட்டான். இன்னும் இரண்டு பேர்

 

நிலா வாயாடி

இந்தியாவப் பொறுத்தவரைக்கும் முதல் டெஸ்ட்

-தோல்விகரமான வெற்றி

2-வது டெஸ்ட்

-வெற்றிகரமான தோல்வி

Hari Kaalicharan

இவ்வளவு வருஷம் விளையாடுற, எத்தனையோ மைதானத்தில் சதம் விளாசியிருக்கிற, இந்த பிட்சில் இந்த பௌலிங் எடுபடும் என்று சொல்வது எல்லாம் டெஸ்ட் தொடருக்கு ஒத்துப்போகக்கூடிய ஒன்றா என்று ஒரு கேப்டனாக யோசிக்க தெரியாதா? இல்லை ரவி சாஸ்திரி உன்னை யோசிக்க விடலையா?? #AUSvIND #ViratKohli

நீதி அரசன்

பிளேயர் ஆப் தி மேட்ச் ஒரு ஸ்பின்னருக்கு கிடைத்து இருக்கிறது. இந்திய அணியில்ஒரு ஸ்பின்னரைக் கூட சேர்க்காமல் இந்திய அணி தேர்வு குழு செய்தது இமாலய தவறு.

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச?

இப்பவே மூக்கு உடையற அளவு குத்தறானுக. அடுத்த மேட்ச், பாக்ஸிங் டே டெஸ்ட் மேட்ச்சாமே..

Sudharsanan Dravid (RD)

இந்த இந்தியன் டீம் தான் எந்தக் காலத்திலும் சிறந்த டீம். சில்லறைய சிதற விட்டவங்கள்லாம் எங்கப்பா இருக்கீங்க

இராஜேஸ் வீரா

புவனேஷ்வர எப்ப கோலி எடுக்கலியோ அப்பவே தோத்துட்டான் ☺️

Diana The Princess

நம்மாளுக கிட்ட திறமைலாம் இல்லாம இல்ல. ஒண்ணு அவுட்டாகிடுவமோ/ தோத்துருவமோனு பயந்துட்டே வெளாடுறது. இல்லனா அசால்ட்டா வெளையாடுறது. இதுல கோலி, பாண்டியா, ஜடேஜா பும்ரா பரவால்ல.

Chandra Kala

ஏன் பா கோலி நல்ல டீம் செலக்ட் பண்ணியிருக்கீங்க பா.. ஒரு ஸ்பின்னர் கூட இல்லாமா.. ப்ச். எனிவே அடுத்த மேட்ச் ராகுல் முரளி விஜய்க்கு வாய்ப்பு கொடுத்துராதீங்க பா தயவு செய்து.

கவின்தமிழ்

தோத்துட்டோமா... சரி சரி வாங்க பிராக்டிஸுக்கு டைம் ஆச்சு.. Hurry Up - கே.எல்.ராகுல்...

S A K T H I

கேப்டன்சினா மத்தவன பெர்பார்ம் பண்ண வைக்குறதுல தான் இருக்கு. வின்னிங் 100% காட்டுனாலும் அது கோலி ஒருத்தரால தான் இருக்கும்.கோலியோட findனு யாருமில்ல யாரயும் உருவாக்கவுமில்ல. தனி ஆவர்த்தனம் செய்வதால் வைரத்தின் ஒளியில் முத்துக்கள் தெரிவதில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x