Published : 01 Dec 2018 06:09 PM
Last Updated : 01 Dec 2018 06:09 PM

ஜி 20 மாநாட்டில் கை குலுக்கிய முகமது பின் சல்மான் - புதின்: தூரத்தில் ட்ரம்ப்

ஜி 20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினும், சவுதி இளவரசர் முகமது பின் சல்மானும் கை குலுக்கிக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சவுதி அரேபியா, மெக்ஸிகோ, ஜப்பான், இத்தாலி, இந்தோனேசியா, இந்தியா, பிரான்ஸ், சீனா, கனடா, பிரேசில், ஆஸ்திரேலியா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகள் ஜி 20 அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன.

இந்த அமைப்பின்  இந்த ஆண்டுக்கான மாநாடு அர்ஜெண்டினா தலைநகரம் பியோனோ ஐரிஸில் நடந்தது. இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின் , இந்திய பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மக்ரோன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த  நிலையில் ஜி 20 மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்களின் புகைப்படங்கள், வீடியோ ஆகியவை சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

இதில் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இருவரும் சிரித்துக் கொண்டே கைகளைக் குலுக்கும்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தூரத்திலிருந்து அவர்களைப் பார்த்தப்படி வருவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

 

ஏமன் உள்நாட்டுப் போரில் சவுதிக்கு ஆதரவாக ரஷ்யா கடந்த ஆறு ஆண்டுகளாக உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x