Published : 03 Dec 2018 10:59 AM
Last Updated : 03 Dec 2018 10:59 AM

தோனிக்கு டான்ஸ் கற்றுத் தரும் மகள்: வைரலாகும் வீடியோ

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் மகள் ஸிவா, தனது தந்தைக்கு நடனம் கற்றுத் தரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மிஸ்டர் கூல் என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் கிரிக்கெட் வீரர் தோனி மைதானத்திலும் வீட்டிலும் எப்போதுமே கூல்தான். கிரிக்கெட், டி20, விளம்பரங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் என்று பிஸியாக இருக்கும் தோனி, மகள் ஸிவாவுடன் நேரம் செலவழிக்க மட்டும் தவறுவதில்லை.

தன் குழந்தையுடன் குழந்தையாகவே மாறிவிடும் தோனி, மகளுடன் எடுக்கும் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் மகள் ஸிவா, தனது தந்தை தோனிக்கு நடனம் கற்றுக் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஸிவா, தோனிக்கு நடனம் கற்றுத் தருகிறார். ஸிவாவின் நடன அசைவுகளைப் பார்த்தவாறே தோனியும் ஆடுகிறார்.

வீடியோவைக் காண

View this post on Instagram

Even better when we are dancing @zivasinghdhoni006

A post shared by M S Dhoni (@mahi7781) on

வீடியோ பதிவிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்களின் விருப்பங்களைப் பகிர்ந்துள்ளனர். அத்துடன் ஸிவாவின் நடனம் அழகாக உள்ளதாகவும் பாராட்டி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x