

இந்திய கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனியும் அவரது மகள் ஸிவாவும் சென்னையில் கடற்கரையில் விளையாடிய வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிக் கொண்டிருக்கிறது.
பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் தலைமையில் ஒரு நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் தோனி கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் தோனி சென்னையில் சில மணிநேரம் சுற்றிப் பார்த்ததாகத் தெரிகிறது.
இதில் தோனி சென்னை கடற்கரையில் தனது மகளுடன் மணலில் விளையாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த வீடியோவை தோனியின் மனைவி எடுக்க அதனை தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதில், ”நாம் சிறுவர்களாக இருக்கும்போது நமது மண் கிடைத்தால் கண்டிப்பாக இதனைச் செய்வோம்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸின் ட்விட்டர் பக்கம் பதிவிட்டு, அதன் ரசிகர்களும் அதனை, 'தல சென்னையில்' என்று தோனியைக் குறிப்பிட்டுப் பகிர்ந்து வருகிறார்கள்.