Published : 29 Dec 2018 06:12 PM
Last Updated : 29 Dec 2018 06:12 PM

நெட்டிசன் நோட்ஸ்: பேட்ட ட்ரெய்லர் - ‏தரம்

ரஜினிகாந்த் நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட’. பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி எனப் பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெய்லர் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதுகுறித்து ரசிகர்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்..

எமகாதகன்

‏பொங்கலுக்கு வெளியாகும்

சூப்பர் ஸ்டார் ரஜினியின்

"பேட்ட"  ட்ரெய்லரை

பார்க்கும் போது  முன்பு

எப்போதும் இல்லாதளவு

மிகப்பெரிய வெற்றிப்படமாக

வசூல் சாதனை

செய்யப் போகிறது என்பது

உண்மை

Kumar

‏பேட்ட ட்ரைலரில் இரண்டு மாஸ் வசனம் பட்டையை கிளப்பியது.

 

இது மட்டும் இல்லைங்க, இது மாதிரி படத்து 50 பன்ச் டயலாக் இருக்கிறதாம்..

 

ஒவ்வொன்றும் சும்மா தெறிக்குமாம்.

 

விஸ்வாச பேட்ட சேட்டு

ஹேஹேஹே சத்தியமா சொல்றேன் அடிச்சு அண்டர்வேரோட ஓட விட்ருவேன் மானம் போனா திருப்பி வராது பார்த்துக்கோ #GetRajinified

 

உளவாளி

 

பேட்ட ட்ரைலர் எதிர்பார்த்தைவிட நன்றாக இருந்தாலும் ஏதோ ஒரு குறை இருப்பதாக படுகிறது.முக்கியமாக கதைக்களம்.மின்சாரகனவு ஏகன் படத்தில் வருவதுபோல் ஓர் கல்லூரி.அங்கே சில பல கேரக்டர்கள்.வார்டன் வேறு.அங்கே என்ன பஞ்ச் பேசுனாலும் சண்டை ஏதோ கேன்டீன் சாம்பார் நல்லா இல்லை என்பதற்காகவே இருக்கும்

 

Rex

‏ரஜினி செம Young ah இருக்காரு....

பேட்ட...

 

கங்கா

‏தரம்    ரஜினி ❤ #பேட்ட

 

குரு®

"பேட்ட" ட்ரைலர் பார்த்ததும் ஒன்னு தெளிவா தெரியுது. இது கண்டிப்பா ரஜினி படம் தான் 

 

திருட்டுகுமரன்

பேட்ட டிரெய்லர் செம...

ஒண்ணு மட்டும் தெரிது இது வரைக்கும் வந்த எல்லா ரஜினி பட வசூலயும் பிரேக் பண்ணிரும்.. ரஜினிக்குனே அளவெடுத்து செஞ்ச சீன்ஸ்    #PettaTrailer #GetRajinified #karthiksubbaraj

 

The SUPER ONE AK™      

கொஞ்சம் ஒதுங்கிரு..

ஓடி பதுங்கிரு..

வர்றது தலைவரு பேட்ட பராக்க்க்க்..

ரஜினி - தி ஆக்டர்.. கபாலிக்கப்றம் ஒவ்வொரு படத்துலயும் இந்த ரஜினியிஸம்றது மறுபடி உடம்பு முழுக்க ஏறிக்கிட்டே போவுது..Nostalgia

 

ஆத்விக்

ர‌ஜினி நடிச்ச எல்லா படத்துல இருந்தும், தனக்கு பிடிச்ச சீன்ஸ், ஸ்டைல் வச்சு கார்த்திக் சுப்புராஜ் எடுத்த படம் தான் பேட்ட போல

 

Hail Victory

கடைசியா வந்த ரஜினி படம் சிவாஜி தான். பேட்ட யும் ரஜினி படமா இருக்கும்னு நம்புவோம்

 

Surjith Lawrence

பேட்ட டிரைலர்...

அக்மார்க் ரஜினி படம் இதுங்கிறத டிரைலர்லையே தெரிய படுத்திட்டாரு கார்திக்சுப்புராஜ்..

"சிறப்பான தரமான சம்பவங்கள இனிமேதான் பாக்க போறோம்.."!!

கேபிள் ராஜா

வசனத்தை எழுதுனவன் மொட்ட சிவா கெட்ட சிவாக்கு எழுதுனவன் போல.. #PettaPongalParaak

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x