Published : 30 Nov 2018 04:08 PM
Last Updated : 30 Nov 2018 04:08 PM

’தோனி கிரிக்கெட் வீரர்களைச் சந்தித்தால்’: வைரலாகும் வீடியோ

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் இந்திய வீரரும், முன்னாள் கேப்டனுமான தோனி  இடம்பெறவில்லை.

தோனி அணியில் இடம்பெறாமல் இருப்பது குறித்து அவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவித்துப் பதிவிட்டு வருகின்றனர். மேலும் , தோனியின் பழைய ஆட்டங்கள் தொடர்பான  வீடியோக்களை அவ்வப்போது பதிவிட்டு வெற்றிடத்தை நிரப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் ட்விட்டர் பயனாளர் ஒருவர் தோனி களத்தில் தனது சக  இந்திய கிரிக்கெட் வீரர்கள், அம்பயர்கள் மற்றும் ஸ்டெம்பிங் செய்யும் முறை ஆகியவற்றை எப்படி அணுகுவார் என்று  நகைச்சுவைகாக  ’மீம்’ வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.

தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிக் கொண்டிருக்கிறது.

அந்த வீடியோவை ட்விட்டரில் மட்டும் 60,000க்கும் மேற்பட்டவர்கள் கண்டுள்ளனர். 2000க்கும் அதிகமானவர்கள் பலரும் ரீட்வீட் செய்துள்ளனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x