#SAVEDELTA: இந்தியா - ஆஸ்திரேலியா டி20 போட்டியில் ஒலித்த இளைஞர்களின் குரல்

#SAVEDELTA: இந்தியா - ஆஸ்திரேலியா டி20 போட்டியில் ஒலித்த இளைஞர்களின் குரல்
Updated on
1 min read

இந்திய - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது 20 - 20 போட்டியின்போது ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மைதானத்தில்  இளைஞர்கள் செய்த செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

சிட்னியில் நடைபெற்ற 3வதும், கடைசியுமான டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 1-1 என்று சமன் செய்தது.

36 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆஸி.யை கட்டுப்படுத்திய  குருணால் பாண்டியா விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியின்போது மைதானத்தில் #SAVEDELTA பதாகைகளை ஏந்தியப்படி சில இளைஞர்கள் நின்றுக் கொண்டிருந்தனர்.

இந்த இளைஞர்களின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. பலரு இவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளன்.

10 நாட்களுக்கும் முன்னர் தென் தமிழகத்தை தாக்கிய கஜா புயல் டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ஆகிய பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in