Published : 07 Nov 2018 04:18 PM
Last Updated : 07 Nov 2018 04:18 PM

நெட்டிசன் நோட்ஸ்: கமல் பிறந்த நாள் - வற்றாத சினிமாவின் மகாநதி

நடிகர் கமல் இன்று (புதன்கிழமை) தனது 64-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனைத் தொடர்ந்து அவரது ரசிகர் தங்கள் வாழ்த்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

balu

‏நீ  பெரும்  கலைஞன்  நிரந்தர  இளைஞன்  ரசனைமிகுந்த  ரகசியக்  கவிஞன்...

கமல் ரசிகன்

‏எங்கள் உள்ளங்களை என்றென்றும் ஆளும் எங்கள் ஆண்டவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Nandhu Rao

‏64 கலைகளை

பெயர் மற்றி

கமல் கலைகள்

என தனிப்படுத்தி

64 வயதைக் காணும்

கமல்ஹாசன்

என்னும் இளைஞருக்கு

இனிய பிறந்தநாள்

வாழ்த்துகள்...

#சாத்தியம் என்பது சொல் அல்ல செயல்...

Leo

‏நடிகர்கள் தனக்கு சினிமால எந்த மாதிரி கதைகள் பொருந்தும்னு தேர்ந்தெடுத்து வரிசையா ஹிட் கொடுப்பாங்க..

கமல் சாருக்கு இந்தக் கதை பொருந்தும்னு நினைச்சாலும் அதுல நடிச்சு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கறது தான் அவர் ஸ்டைலே.

ishal Santhosh

‏என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஆசான் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் !! :-) @ikamalhaasan

டீ

‏குழந்தை நட்சத்திரமாய் இருந்த கமல் 73 ஆம் ஆண்டு ”சொல்லத்தான் நினைக்கிறேன்” மூலம் இளவயது நடிகராகி 43 ஆண்டுகள்

Jayaprakash

‏சந்தேகமில்லை தமிழ் சினிமாவின் "பொக்கிஷம் தான்" கமல்.

அந்த பொக்கிஷம் அரசியல் சுரங்கத்தில் தங்கம் தேடப் புறப்பட்டது தான் பரிதாபம்..

பிறந்த நாள் வாழ்த்துகள் கமல் சார்....!

 

Dhavamani Kamal

‏என்னை வழிநடத்தும் ஆசான் கமல்ஹாசனே...

உன்னால்தான் உடல்தானம் செய்தேன்..

அரசியல் - என் கடமை

என உணர்த்திய உலகநாயகனே..

எம் பிறந்தநாள் வாழ்த்துகள்.

Capt .Johnson C

 “நம்மவர்” நமக்காக பல்லாண்டு காலம் நீடுழி வாழ வாழ்த்துகிறேன் .

Happy Birthday kamal sir..

k.dhinesh kumar

எங்கள் தலைவர் ஆசான் கமல் சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

 

அவதார்

வயது ஆக ஆக முதுமை கூடாமல் அனுபவம் மட்டுமே கூடும் இவருக்கு..

என்றும் இளமையான உலக நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் @ikamalhaasan

 

குட்டி பையன்

உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு... உன்னைப் பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு.... 

#உலக_நாயகனே.....

 

sudharsana subramani

என்றும் வற்றாத சினிமாவின் 'மகாநதி' நமது கலைஞானி...

Madhan Mithran

உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழ் சினிமாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

அட போடா!!

நடிப்பென்னும் கலை உலகின் #கடாரம்_கொண்டான் கமலு( @ikamalhaasan )க்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

Poorna Pdmk

சினிமாவின் சிகரமே  பிறந்த நாள் வாழ்த்துகள்

Chandra Shekhar

‏மாபெரும் சபையினில் நீ நடந்தால்

உனக்கு மாலைகள் விழவேண்டும்;

ஒரு மாற்று குறையாத மன்னவன் இவனென்று

போற்றிப் புகழ வேண்டும்...  பிறந்த  நாள் வாழ்த்துகள்

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x