தமிழில் உரையாடும் தோனி...ஸிவா

தமிழில் உரையாடும் தோனி...ஸிவா
Updated on
1 min read

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியும் அவரது மகள் ஸிவாவும் தமிழில் உரையாடும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இடப்பெறவில்லை. அணியில் தோனி இடம்பெறாமல் இருப்பதால்  அவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவித்து பதிவிட்டு வந்தனர்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர், தோனி மீது இருந்த அதே வெளிச்சம் அவரது மகள் ஸிவா மீது விழுந்துள்ளது. இதற்கு காரணம் அவர் தோனி மகள் என்பது மட்டுமல்ல, அவரது மழலை மொழியுடன் கூடிய குறும்பு செயல்கள் என்று கூறலாம். இதன் காரணமாக சமூக வலைதளத்தில் ஸிவாக்கும் தனியான ரசிகர் பட்டாளம் பெருகி வருகிறது.

அந்த வகையில் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தோனி தனது இன்ஸ்டிராகிராமில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில்  இரண்டு மொழிகளில் வாழ்த்துகளை தோனியும் அவரது மகள் ஸிவாவும் பகிர்ந்துக் கொண்டனர். அதில் தமிழும் இடப்பெற்றிருந்தது.

அந்த வீடியோவில் எப்படி இருக்கீங்க என்று ஸிவா கேட்க, நல்ல இருக்கேன் என்று தோனி கூறுகிறார்...

இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுருந்தது.  அந்த வீடியோவை  தோனி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து  வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in