

வங்கக் கடலில் உருவான 'கஜா' புயல், நாகை -வேதாரண்யம் இடையே வியாழக்கிழமை நள்ளிரவில் கரையைக் கடந்தது. நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
'கஜா' புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தைப் பதிவிட்டு வருகிறார்கள் அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
செகா
ஊடகம் கூட சென்று பார்க்க இயலா நிலையில் புதுக்கோட்டை கிழக்குப் பகுதிகளான வடகாடு, மாங்காடு, அணவயல், கிரமங்கலம், கொத்தமங்கலம், பனங்குலம்,குலமங்களம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வழி காட்டி
நீ வந்த தடம் தெரியவில்லை
ஆனால் போன தடத்தை மிக
அழுத்தமாகப் பதிந்து விட்டாயே..!!
#கஜாபுயல்
இடும்பாவனம் கார்த்தி
மனித உயிர்களை மட்டும் மிச்சம் வைத்துவிட்டு கடலோர மாவட்டங்களை மொத்தமாய் வாரி சுருட்டிச் சென்றிருக்கிறது கஜா புயல்.
Neelakandan
1952 பெரும் புயலுக்குப் பிறகு கஜா..
50 வருட வாழ்க்கை முறைகளை அடியோடு மாற்றிவிட்டது..
புதுக்கோட்டை ஆலங்குடி தாலுகா, தஞ்சை பேராவூரணி தாலுகா தென்னை விவசாயிகளின் வாழ்வியல் ஆதாரத்தை முற்றிலும் இழந்து நடுத்தெருவில் வந்துவிட்டோம். மீண்டு வர 10 ஆண்டுகள் ஆகும்.
Jayapaul Balu
பட்டுக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள் அதிக பாதிப்பை ஏற்பபடுத்தியுள்ளது.
Jilla JaNa ️
திருப்பூரில் கஜா புயல் தாக்கம் காரணமாக சூறைக்காற்றுடன் பலத்த மழை.
MANIKANDAN N
பல லட்சம் மரங்கள் சாய்ந்தன.
பல ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்தன.
பல ஆயிரம் குடிசைகள், வீடுகள் சேதமடைந்தன.
பல உயிர்கள் போயிருக்கு.
ஆனா இதுவரை மத்தியில் இருந்து ஒரு ஆறுதலுக்கு உதவி செய்கிறோம்னு கூட யாரும் சொல்லல.!
elva rangam
வேதாரண்யம் அருகே பலத்த சூறைக்காற்றுடன் ஆக்ரோஷமாக கரையைக் கடந்தது ‘கஜா’ புயல்:
மின்சாரம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு துண்டிப்பு.!!
அதியன் கார்த்தி
எங்க வீட்டு மரம் எல்லாம் சுத்தமா காலி ... மீண்டு வர ரெம்ப மாசம் ஆகும்.... தென்னை தோப்பு வெச்சிருக்குறவங்க நிலைமை இன்னும் மோசம்
micheal stalin
கஜா புயல் விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே தமிழக அரசு மிகவும் சிறப்பாக செயல்பட்டது
பாராட்டுக்குரியது...
எதிர்பார்த்ததை விட சேதம் அதிகமாக இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது
பாதிக்கப்பட்டுள்ள உறவுகள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இறைவன் அருளட்டும்.
ஜெ பி முத்து (மதுரைக்காரன்)
இதுவரை புயல் என்றால் எப்படி இருக்கும் என்று அறியாத திண்டுக்கல்,தேனி மவட்டங்களை கூட விட்டு வைக்கவில்லை... கஜா புயல்
சிறுதுளி
#கஜா புயல் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேதாரண்யம் போன்ற தென் தமிழ்நாட்டில் பெருத்த சேதத்தை விளைவித்துள்ளது.
நா ( கெட்டவன் ) தா ..!!
எவ்வளவு தான் முன் எச்சரிக்கையாக இருந்தாலும் #இயற்கையை யாரும் வெல்லமுடியாது
என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த
#கஜா_புயல்