நெட்டிசன் நோட்ஸ்: படேல் சிலை - இந்தியாவில் ஓர் இரும்பு சிகரம்!

நெட்டிசன்  நோட்ஸ்: படேல் சிலை - இந்தியாவில் ஓர்
 இரும்பு சிகரம்!
Updated on
2 min read

இந்தியாவின்  இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத்தில் உலகின் மிக உயரமான சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

நர்மதா ஆற்றின் சர்தார் சரோவர் அணைக்கருகே, ஆற்றுத் தீவான சாதுபேட் என்ற இடத்தில் இந்தச் சிலை நிறுவப்பட்டுள்ளது. இது குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தைp பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிடன் நோட்ஸில்....

Eazhilarasan

‏இந்தியா,

3000 கோடி ரூபாய் செலவில்

182 மீட்டர் வளர்ச்சி அடைந்தது இன்று...

74.04 ரூ. வீழ்ச்சி US Dollar-ல் இன்று...

இந்த 3000 கோடியை இந்திய நதிகளை ஒன்றிணைக்கப் பயன்படுத்தியிருக்க வேண்டும்...

நா. ப. மணிகண்டன்

‏ஏழைகள் நிறைந்த நாட்டில்

கோடிக் கணக்கில்

ஒருவருக்கு சிலை

Ramanujam.K

‏நாட்டின் வளர்ச்சிக்காக சமஸ்தானங்களை ஒருங்கிணைத்த சர்தார் வல்லபாய் படேலுக்கு உலகில் உயரமான சிலை. #ஒற்றுமை முக்கியம் என்பதை உணர்ந்துள்ளார் பிரதமர்

சி.விஜய்

‏2900 கோடி ரூபாய் செலவில்

உலகிலேயே மிக உயரமான படேல் சிலையை பிரதமர் மோடி திறப்பு...

இனிமேல்

ஊழல் ஒழிந்துவிடும்,

கொலை கொள்ளைகள் நடக்காது,

ஜாதி மதப் பிரச்சினைகள் வராது,

மக்கள் பசி பட்டினியின்றி செழிப்போடு வாழ்வார்கள்..

சுருக்கமாகச் சொன்னால் நாடு வல்லரசாகிவிடும்.

பாண்டியன் குவேரா

‏இன்று.

படேலுக்கு 300 கோடியில் சிலை திறக்கிறது மோடி அரசு.

மீனவர்களுக்கு 192 வீடுகள் கட்டி திறந்து வைக்கிறது பினராய் விஜயன் அரசு.

எது வளர்ச்சி?

senthil kumar                    ️

‏உலகின் மிக உயரமாக உருவாக்கப்பட்ட வல்லபாய் படேலின் சிலையில், தமிழ் மொழிபெயர்ப்பு மிக மோசமான முறையில் செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

James Stanly

‏நாம் விலை குறைப்பு தானே கேட்டோம்.. இதென்ன சிலை திறப்பு.. 

என்ன காரணம்.. யார் செய்த தவறு....

பெட்ரோல் விலை என்னாச்சி..? 

177அடி சிலை தொறந்தாச்சி..! 

இதற்கு இது பதில் இல்லயே.

Lenin Veera Pandiyan

‏படேல் உருவத்தை பணத்தில் போடலாம்..

ஆனால் இங்கே...

பணத்தை படேல் உருவத்தில் போடறாங்க!!!

sujiprabhu

‏படேலுக்கு உயரமான சிலை வைப்பதால் - மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்..

இந்தியா வல்லரசு நாடாக மாற்றிவிடலாம் என்று மோடி நினைக்கிறார் போல...

கவி   மைந்தன்  

‏இரும்பு மனிதருக்கு

இந்தியாவில் ஓர்

இரும்பு சிகரம்..

Prabhu Selvamani

‏Statue Of Unity என்ற வார்த்தையைக் கூட தமிழில் எழுதத் தெரியாத மத்திய அரசு. உலகில் மூத்த மொழியாம் தமிழ். ஆனால் சொந்த நாட்டிலே இப்படி தமிழைக் கொல்கிறார்கள்.

பிரவீன் 

‏நீங்க அவ்ளோ செலவுல ஒரு மருத்துவமனை அல்லது ஒரு கல்வி நிறுவனம் தொடங்கி அதுக்கு வல்லபாய் படேல் பேரு வெச்சிருக்கலாம்.

இந்தியாவிற்கு உடனடி தேவை  உயர்ந்த நிலை !

சிலை அல்ல

RÇ~TN74

‏சுதந்திரம் அடைந்ததும் சமஸ்தானங்களாகப் பிரிந்து கிடந்த இந்தியாவை இணைத்து ஒரே நாடாகக் கட்டி உருவாக்கி, இந்தியாவின் இரும்பு மனிதர் என பெயர் பெற்றவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in