Published : 20 Oct 2018 04:06 PM
Last Updated : 20 Oct 2018 04:06 PM

நெட்டிசன் நோட்ஸ்: சர்கார் டீஸர் - ‏பட்டாசு...தலைவா!

பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே முருகதாஸ் இயக்கத்தில் விஜய், வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் 'சர்கார்' படத்தின் டீஸர் வெள்ளிக்கிழமை வெளியானது. இதுகுறித்து தங்கள் கருத்துகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

saravanan Hari 

‏#SarkarTeaser இன்னும் படம் வர்றப்ப எ‌ன்ன எ‌ன்ன மாறும், மாறப் போகுதுனு ஓரமா நின்னு வேடிக்கை ம‌ட்டு‌ம் பாருங்க. இது மக்களின் சர்கார். #Sarkar

Ameen Khaleel

‏#SarkarTeaser I'm a corporate cirminal ...

உங்க ஊர் உங்க தலைவனை தேர்ந்தெடுங்க இதுதான் நம்ம #சர்கார்

நிகழ்கால அரசியலை திரையில் காட்ட ஒரு தில்லு வேணும்

Roman Reigns

"ராட்சச புகழ் ஒன்று எழுந்து நிற்கும்

ஒலிக்கும் பேர் ஒன்று அரங்கமே அதிரவைக்கும்" ... #SarkarTeaser   

User dead

‏இந்த ஜெனரேசன்ல kids க்கு சர்கார் மூவி ஒரு இந்தியனாகவோ முதல்வனாகவோ கண்டிப்பா இருக்கும்

இன்னும் 30 வருசத்துக்கு பெருமையா சொல்லிக்கூடிய மெகா ப்ளாக்பஸ்டரா இருக்கும்

sakthi Dinakaran

‏ஒவ்வொரு தடவையும் இவங்க சேரும் போது விஜய் , ஏ.ஆர். முருகதாஸ்  ஒரு அதி பயங்கரமான வெடிச் சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கு.

இந்த தீபாவளிக்கும் அது தொடரும்.

இட்லி

‏மேக்கிங் நல்லாருக்கு!

கூட்டம் கூட்டமா இருக்குறத பாக்குறப்ப ’கத்தி’ படம் தான் நியாபகம் வருது!

படத்துல ஏதும் நியாயப்படுத்துறாப்ல குறிப்பிட்ட காரணம் ஏதும் இல்லைன்னா தாடி இல்லாம எடுத்திருக்கலாம்!

டிரைலர் வரட்டும் பார்ப்போம்!

கப்பல் வியாபாரி

‏ஓக்கே தீபாவளிக்கு ஃபர்ஸ்ட் ஷோ போவோம் இந்த வாட்டியாச்சும்

Ghilli siva.Madurai

‏#இது தான் நம்ம சர்கார்.....விஜய் அண்ணாவுக்கு வயசு ஆகாது போல...

GoHan

‏`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க!’

மதுரைகாரன்   

‏இனி ஆட்டம் பாட்டம் தான்

பட்டி தொட்டியெங்கும் இனி

#சர்கார் ஆட்டம் தான்

ராஜ் தமிழன்

‏வரலாற்றிலேயே முதல்முறையா ஒரு படத்தின் குறுங்காணொளி ஒரு முழுப் படம் பார்த்த மனநிறைவைக் கொடுத்திருக்கிறது.

நான் நானாக

‏கார்ப்பரேட் மக்களை ஏமாத்துனா கத்தி.. காப்பாத்துனா #சர்கார்..அவ்ளோ தான்.. கிராமத்துல இருந்து சென்னைக்குப் போனா திருப்பாச்சி.. சென்னையில இருந்து கிராமத்துக்கு வந்தா சிவகாசி மொமன்ட்

 

 

MADHAN ツ

‏அன்றே சொன்னார் ....

ஈடு இல்ல எவனும் எங்க தளபதி தான் வரணும்  

Maathevan

‏வயசு வயசுன்னு ஒண்ணு இருக்கு. அது, விஜய் முகத்துக்கு மட்டும் Long Leave எடுத்துட்டு ஊரப்பார்க்க போயிருச்சுன்னு நல்லா தெரியுது!

புதுவை குடிமகன்

‏Flightல இருந்து எறங்கி வர சீன்

Mr.Sir’castic

‏பட்டாசு...தலைவா!  #SarkarTeaser

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x