பிகு: அவளுக்கு ஏதும் ஆகி விடக் கூடாது - அச்சம் தந்த ட்ரெய்லர்

பிகு: அவளுக்கு ஏதும் ஆகி விடக் கூடாது - அச்சம் தந்த  ட்ரெய்லர்
Updated on: 
1 min read

தேசிய விருது பெற்ற இயக்குனர் வினோத் கிப்ரியின் இயக்கத்தில் பிகு திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில்  வெளியிடப்பட்டது.

சுமார் இரண்டு நிமிடங்கள் ஓடும் அந்த ட்ரெய்லரில் வீட்டில் தனியாக தாய் மற்றும் 2 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையும் இருக்கின்றனர்.  நினைவிழந்த நிலையில் தாய் படுக்கையில் இருக்கும்போது அந்த பெண் குழந்தை தனியாக என்ன செய்வது என்று தெரியாமல் அந்த குழந்தை அடுத்தடுத்து செய்யும் செயல்கள் அந்த பெண் குழந்தைக்கு ஏதும் ஆகிவிடக் கூடாது என்று  நம்மை சற்று அச்சுறுத்தும் வண்ணம் அமைந்துள்ளன.

இந்த வீடியோ 40 லட்சம் பேரால் இதுவரை  இணையத்தில் பார்க்கப்பட்ட்டுள்ளது.  இந்தப் திரைப்படம்  நவம்பர் 16 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்த திரைப்பத்தில் நடித்திருக்கும் பெண் குழந்தை குறித்து இயக்குனர் வினோத் கிப்ரி கூறும்போது,  ” நாங்கள் மைராவுக்கு அவளுக்கு தேவையான நேரத்தை வழங்கினோம்.  நாங்கள் எடுக்கும் ஓவ்வொரு காட்சிக்கும் மூன்று கேமராவை வைத்தோம் ஏனென்றால் மூன்று வயது குழந்தையிடம் நீங்கள் ரீடேக் சொல்ல முடியாது. அந்த ட்ரெய்லரில் அவள் வைத்திருக்கும் பொம்மைகள் அனைத்தும் அவளுடையதுதான்” என்று கூறி உள்ளார்.

பிகு திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்து நெட்டிசன்கள்

Vishnupriya bangarusamy

‏

Pihu  ட்ரெய்லர்...

ப்ப்பா... விவரிக்கவே முடியாத உணர்வு.. பேய்படம் பாத்தாக்கூட இதயம் இவ்வளவு வேகமா துடிக்காது..

இந்த டிரெய்லர் பாத்து முடிக்கிறப்ப உங்க வீட்ல குழந்தை இருந்தா கண்டிப்பா ஓடிப்போய் கட்டிப்பிடிச்சுப்பீங்க.....

BlackHat

‏

Pihu ட்ரெய்லர் பாத்ததுக்கப்றோம் மனசு படப்படனு அடிச்சுக்குது.   நிவேதா பெத்து ரீசன்ட் இமேஜஸ் பாத்தாதான்,மனசு பழைய நிலைக்கு திரும்புது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in